தோனி ஓய்வுபெற்றுவிட்டால் மீண்டும் கிடைக்கமாட்டார் என்பதை உணரவேண்டும் என்று நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மிகச்சிறந்த வகையில் அணி வழிநடத்தியவர் கேம் செஞ்சர் என்ற பல பெயர்களுக்கு சொந்தக்காரராக திகழ்பவர் மகேந்திர சிங் தோனி. அன்மைக்காலமாக அவருடைய ஓய்வு குறித்த சர்ச்சை பேச்சுக்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன.ஆனால் இதற்கு தோனி தரப்பில் உறுதி செய்யப்படதா நிலையில் சமீபத்தில் 2020ம் ஆண்டுக்கான வீரர்களின் ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ வெளியிட்டது.
அந்த பட்டியலில் தோனியின் பெயர் இடம்பெறாதது பரவி வந்த யுகங்கள் எல்லாம் உறுதி செய்தன என்று கிரிக்கெட் விமர்கள் கருதிய நிலையில் இந்த பட்டியல் தோனியின் ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதோடு தோனியின் பெயர் ஒப்பந்த பட்டியலில் இடம்பெறாதது குறித்து பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வந்தனர்.இதன் பின் கோடைகால கொண்டாட்டமாக ஐபிஎல் தொடர் தொடங்க இருந்தது.ஆனால் கொரோனா காரணமாக இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கடைசி 2 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது .எனவே ஐபிஎல் தொடரும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தோனியின் நிலை என்னவாகும் என்ற கேள்வி அதிக அளவில் உலவி வந்தது.
இந்நிலையில் தோனி குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரும்,கிரிக்கெட் வர்ணனையாளருமான நாசர் ஹுசைன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், இந்தியா கிரிக்கெட் வாரியம் ,ஒருமுறை தோனி ஓய்வுப்பெற்று வெளியேறிவிட்டால், மீண்டும் அவர் கிடைக்க மாட்டார் என்பதை உணர வேண்டும் .தோனியை முன்பே ஓய்வுப்பெற வைத்து விடவேண்டாம். தோனி என்ன நினைக்கிறார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும். தோனியிடம் இன்னும் திறமை இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…