ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணியில் தோனி மேலும் இரண்டு ஆண்டு தொடர்வார் என அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இந்தியாவிற்காக பல சாதனைகள் செய்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி அறிவித்தார். அதனையடுத்து ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.
ஐபிஎல் போட்டி தொடங்கிய 2008 ஆம் ஆண்டிலிருந்து தோனி சென்னை அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார். சென்னை அணி தடை செய்யப்பட்டபோது புனே அணிக்கு தலைமை ஏற்றார் மீண்டும் சென்னைக்கு அனுமதி கிடைத்த போது அதில் இணைந்து கொண்டு மீண்டும் கேப்டனாக விளையாடினர்.
இந்த நிலையில், சென்னை அணியில் தோனி மேலும் இரண்டு ஆண்டு தொடர்வார் என்று அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இது குறித்து ஊடகத்திற்கு பேட்டியளித்த காசி விஸ்வநாதன் ” தோனி முழுதகுதியுடன் இருக்கிறார். அவரை சென்னை அணியில் இருந்து விடுவிக்க காரணம் ஒன்றுமில்லை. தோனி மேலும் இரண்டு ஆண்டு சென்னை அணியில் தொடர்வார்” என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று ஐபிஎல் ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கிறது. முதல் போட்டி மதியம் 3:30மணிக்கு லக்னோ மற்றும் குஜராத்…
சென்னை : ஒரு காலத்தில் ஐபிஎல் தொடரில் ஒரு பலமான அணியாக பார்க்கப்பட்ட சென்னை அணி, இந்த சீசனில் பரிதாபமாக…
சென்னை : கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. முதலில் பேட்டிங்…
சென்னை : ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் தொடர்ந்து 5வது முறையாக தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ். 8…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை…
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…