தோனி ஒரு பெரிய ஸ்டாராக வருவார்- கங்குலி.!
கங்குலி என்னிடம் ஒரு பெரிய ஸ்டாராக வருவாய் என்று கூறியதாக தோனி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன் என்றால் தோனி என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான் அவர் இந்திய அணிக்காக செய்த சாதனையை அனைத்தும் மக்களுக்கு மனதில் அழிக்கமுடியாத ஒன்றாகத்தான் இருக்கிறது. மேலும் இந்திய அணி எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலைகளில் இந்திய அணியை மீண்டு எடுத்தவர், மேலும் தோனி இந்தியாவிற்காக அதிக கோப்பைகளை வென்று கொடுத்த ஒரே கிரிக்கெட் வீரர் என்று கூறலாம்.
இந்நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் தற்பொழுது கிரிக்கெட் சங்க தலைவரான கங்குலி தன்னிடம் பேசியதை தோனி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார், அதில் அவர் கூறியது கடந்த 2004ம் ஆண்டு நானும் கங்குலியும் விமான நிலயத்தில் சந்தித்தோம், அப்பொழுது அவர் என்னிடம் நீங்கள் சூப்பர் கிரிக்கெட் வீரராகவும் சிறந்த கேப்டனாகவும் வருவீர்கள் என்று கங்குலி கூறியதாக தோனி கூறியுள்ளார்.