நேற்றைய போட்டி மூலம் புதிய உலக சாதனை படைத்த தோனி !

Default Image

நேற்றைய முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணியும் , நியூஸிலாந்து அணியும் மோதியது .இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்றது .இப்போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

முதலில் நியூஸிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக  மார்ட்டின் குப்டில் ,ஹென்ரி நிக்கோல்ஸ் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே மார்ட்டின் குப்டில்ஒரு  ரன்னில் வெளியேறினர்.

இந்நிலையில்  நியூஸிலாந்து அணி  46.1 ஓவரில்  211 ரன்கள் அடித்து ஐந்து விக்கெட்டை இழந்து  விளையாடி கொண்டு இருந்த  போது மழை குறுக்கிட்டதால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.பின்னர் மழை தொடர்ந்ததால் போட்டியை இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் நேற்றைய போட்டியில் தோனி விளையாடியதன் மூலம் புதிய  உலக சாதனைகளை படைத்து உள்ளார். தோனிக்கு இது 350 ஒருநாள் போட்டி ஆகும். 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய 10 -வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.

இந்நிலையில் இந்திய அணியில் சச்சினுக்கு பிறகு 350  ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இரண்டாவது இந்திய அணி வீரர் என்ற சாதனையும் படைத்தது உள்ளார்.மேலும் 350  ஒருநாள் போட்டிகளிலும் விக்கெட் கீப்பராக விளையாடிய முதல் வீரர் என்ற உலகசாதனையை படைத்து  உள்ளார்.

இதற்கு முன் இலங்கை அணியின் முன்னாள் வீரர் சங்ககாரா 360 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருந்தார்.ஆனால் அவர் 44 போட்டிகளில் கீப்பராக இல்லை .தோனி 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அதில் 200 போட்டிகளில் கேப்டனாக இருந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்து உள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்