சக வீரருக்கு பேட்டில் ஆட்டோகிராப் செய்த தோனி !
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி உலகக்கோப்பை தொடருக்கு பின் ஓய்வு பெறுவார் என கூறப்பட்டு வந்தது.ஆனால் உலகக்கோப்பை தொடருக்கு பிறகு தோனி ஓய்வை அறிவிக்கவில்லை.இதனால் சமூக வலைத்தளமான ட்விட்டரில் பலர் ஓய்வை அறிவிக்கவும் , அறிவிக்க கூடாது என கூறி வந்தனர்.
இந்நிலையில் தோனி இரண்டு மாதத்திற்கு இராணுவ பயிற்சியில் ஈடுபட அவருக்கு அனுமதி கிடைத்ததால் தோனி பாராசூட் ரெஜிமெண்டில் வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டு நேற்று முதல் காஷ்மீரில் உள்ள விக்டர் படையுடன் ரோந்து பணியில் ஈடுபட்டார்.
இந்நிலையில் தெற்கு காஷ்மீரில் பணியில் தோனி இருக்கும்போது ராணுவ சீருடையில் பேட் ஒன்றில் தோனி ஆட்டோகிராப் போடும் புகைப்படம் சமூக வைரலாகி வருகிறது. சக வீரர் ஒருவர் தோனியிடம் ஆட்டோகிராப் பெற்றுள்ளார்.