ஓய்வு அறையில் தோனி போல வீரர்களிடம் நடந்து கொள்கிறேன் -விராட் கோலி !
உலகக்கோப்பை தொடருக்கு பிறகு இந்திய அணியில் அதிக மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளது. ரிஷாப் பண்ட் போன்ற இளம் வீரர்களுக்கு இனி வரும் போட்டிகளில் அதிக அளவில் வாய்ப்பளிக்கப்படும்.மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் விளையாட உள்ள போட்டியில் இந்திய அணியில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் கோலி இளம் வீரர்களை பற்றி புகழ்ந்து பேசி உள்ளார்.அதில் , இப்போது உள்ள இளம் வீரர்களை பார்க்கும் போது அற்புதமாக உள்ளார்கள். இவர்களின் தன்னம்பிக்கையை பார்க்கும் போது வியப்பாக உள்ளது.
நாங்கள் இளம் வயத்தில் இருக்கும் போது இதுபோன்ற வீரர்கள் பாதியளவு கூட இல்லை. ஐபிஎல் போன்ற தொடர்களால் இவர்களின் திறமை வளர்ந்து உள்ளது.மேலும் தங்கள் தவறுகளை உடனடியாக திருத்தி கொள்கிறார்கள் என கூறினார்.
ஓய்வு அறையில் சூழல் பற்றியும் கேப்டன் கோலி பேசினார்.அதில் , ஓய்வு அறையில் வீரர்களை திட்டும் பழக்கம் கிடையாது. ஓய்வு அறையில் தோனி எப்படி குல்தீப் உடன் இருந்தாரோ அதே போல தான் நானும் வீரர்களிடம் நடந்து கொள்வதாக கூறினார்.