மும்பையில் தோனிக்கு முழங்கால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது
மும்பை மருத்துவமனையில் வியாழக்கிழமை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் இடது முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த ஐபிஎல் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று ஐந்தாவது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது.
தோனி இந்த முழு ஐபிஎல் சீசன் முழுவதும் இடது முழங்காலில் ஏற்பட்ட காயத்துடன் விளையாடி வந்தார்.இந்நிலையில் மும்பை மருத்துவமனையில் அவருக்கு வெற்றிகரமாக இடது முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியை சிஎஸ்கே தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் உறுதிசெய்துள்ளார்.
இந்த செய்தியின் விரிவாக்கம் தொடரும்.