நாளை பலப்பரீட்சை.. ஆர்சிபி டிரஸ்ஸிங் ரூமுக்கு திடீர் விசிட் அடித்த தோனி.!

Published by
கெளதம்

சென்னை: வாழ்வா சாவா என்ற தருணத்தில் இருக்கும் சிஎஸ்கே – ஆர்சிபி இடையேயான ஐபிஎல் போட்டிக்கு முன் தோனி ஆர்சிபி டிரஸ்ஸிங் ரூமுக்கு திடீர் விசிட் செய்தார்.

சிஎஸ்கே – ஆர்சிபி இடையேயான ஐபிஎல் போட்டி, நாளை இரவு 7.30 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே, சென்னை அணிப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால், சிஎஸ்கே வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக, சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரரான தோனி, பேட்டிங் மற்றும் கீப்பிங்கையும்  தாண்டி, பவுலிங் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இரு அணிகளும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருவதால், நாளைய போட்டி நிச்சயம் விறுவிறுப்பாக இருக்கும் என தெரிகிறது.

இதனிடையே, இப்போட்டிக்காக நேற்று பயிற்சியில் ஈடுபட்டிருந்த தோனி, திடீரென பெங்களூரு அணியின் டிரஸ்ஸிங் ரூமிற்கு சென்றார். அப்போது, அங்கிருந்த ஆர்சிபி வீரர்கள் மற்றும் ஊழியர்களுடன் டீ குடித்து உரையாடிய அவரது வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

ப்ளே-ஆஃப் யாருக்கு

நாளை நடைபெறவுள்ள போட்டியில், பெங்களூரு அணி தோல்வி அடைந்தாலோ அல்லது மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டாலோ, சிஎஸ்கே அணி 4 ஆவது அணியாக ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். அதே நேரம், 18 ரன்கள் வித்தியாசத்தில் அல்லது 18.1 ஓவர்களுக்குள் ஆர்சிபி அணி இலக்கை அடைந்தால் சென்னை அணியை விட ரன் ரேட்டில் முன்னேறி 14 புள்ளிகளுடன் ப்ளே-ஆஃப் சுற்றுக்கு 4-வது அணியாக முன்னேறும்.

Published by
கெளதம்

Recent Posts

“உங்கள் காலடி மண்ணை தொட்டு.,” தவெக தலைவர் விஜயின் ஆவேசமான முழு பேச்சு இதோ….

காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…

14 minutes ago

சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை : எடப்பாடி ஏன் அவசரப்படுகிறார்? அமைச்சர் எஸ்.ரகுபதி கேள்வி!

சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…

22 minutes ago

அது வேற மக்கள்..இது வேற மக்களா? த.வெ.க தலைவர் விஜய் கேள்வி!

சென்னை :  பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…

44 minutes ago

பரந்தூர் வந்தடைந்தார் தவெக தலைவர் விஜய்! உற்சாக வரவேற்பு அளித்த தொண்டர்கள்…

காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…

1 hour ago

பிக் பாஸ் டைட்டிலை தட்டி தூக்கிய முத்துக்குமரன்! வாங்கிய பரிசுகள் என்னென்ன தெரியுமா?

சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…

2 hours ago

காசா எல்லையில் ஆனந்த கண்ணீர்.. சுதந்திர காற்றை சுவாசிக்கும் பாலஸ்தீன மக்கள்!

காசா : அக்டோபர் 2023-ல் தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போரால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக காசா நகர்…

2 hours ago