நாளை பலப்பரீட்சை.. ஆர்சிபி டிரஸ்ஸிங் ரூமுக்கு திடீர் விசிட் அடித்த தோனி.!

சென்னை: வாழ்வா சாவா என்ற தருணத்தில் இருக்கும் சிஎஸ்கே – ஆர்சிபி இடையேயான ஐபிஎல் போட்டிக்கு முன் தோனி ஆர்சிபி டிரஸ்ஸிங் ரூமுக்கு திடீர் விசிட் செய்தார்.
சிஎஸ்கே – ஆர்சிபி இடையேயான ஐபிஎல் போட்டி, நாளை இரவு 7.30 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே, சென்னை அணிப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால், சிஎஸ்கே வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக, சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரரான தோனி, பேட்டிங் மற்றும் கீப்பிங்கையும் தாண்டி, பவுலிங் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இரு அணிகளும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருவதால், நாளைய போட்டி நிச்சயம் விறுவிறுப்பாக இருக்கும் என தெரிகிறது.
When he bowls, just ADORABOWL! ????????#WhistlePodu #Yellove @msdhoni pic.twitter.com/e1BaGaWduA
— Chennai Super Kings (@ChennaiIPL) May 16, 2024
இதனிடையே, இப்போட்டிக்காக நேற்று பயிற்சியில் ஈடுபட்டிருந்த தோனி, திடீரென பெங்களூரு அணியின் டிரஸ்ஸிங் ரூமிற்கு சென்றார். அப்போது, அங்கிருந்த ஆர்சிபி வீரர்கள் மற்றும் ஊழியர்களுடன் டீ குடித்து உரையாடிய அவரது வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
ப்ளே-ஆஃப் யாருக்கு
நாளை நடைபெறவுள்ள போட்டியில், பெங்களூரு அணி தோல்வி அடைந்தாலோ அல்லது மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டாலோ, சிஎஸ்கே அணி 4 ஆவது அணியாக ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். அதே நேரம், 18 ரன்கள் வித்தியாசத்தில் அல்லது 18.1 ஓவர்களுக்குள் ஆர்சிபி அணி இலக்கை அடைந்தால் சென்னை அணியை விட ரன் ரேட்டில் முன்னேறி 14 புள்ளிகளுடன் ப்ளே-ஆஃப் சுற்றுக்கு 4-வது அணியாக முன்னேறும்.
லேட்டஸ்ட் செய்திகள்
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025