நேற்று நடந்த முதல் அரை இறுதி போட்டியில் இந்திய அணியும் ,நியூஸிலாந்து அணியும் மோதியது.இப்போட்டியில் இந்திய அணி நியூஸிலாந்து அணியிடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இப்போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ,ஜடேஜா இவர்கள் இருவரின் கூட்டணியில் இந்திய அணியை பரிதாப நிலையில் இருந்து மீட்டு கொண்டு வந்தனர். இருவரும் சிறப்பாக விளையாடி வந்தனர்.
போட்டியில் ஜடேஜா 48 ஓவரில் விக்கெட்டை பறிகொடுக்க பின்னர் அதிரடியாக விளையாட வேண்டிய நிலைமைக்கு தோனி தள்ளப்பட்டார்.இதனை தொடர்ந்து 49 ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் விளாசினார்.அடுத்த பந்தில் ரன் எடுக்காமல் நின்றார்,பின்னர் அடுத்த பந்தை அடித்து இரண்டு ரன்கள் ஓட முயற்சி செய்த போது தோனி ரன் அவுட் ஆனார்.இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அரை இறுதி போட்டியை கொல்கத்தாவை சார்ந்த ஸ்ரீ காந்த் மைட்டி என்பவர் செல்போனில் பார்த்து கொண்டு இருந்தார்.அப்போது தோனி ரன் அவுட் ஆன போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அருகில் இருந்த கடைக்காரர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.ஆனால் அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…