ஐபிஎல் தொடரில் 200 வது சிக்ஸரை விளாசுவரா டேவிட் வார்னர்..?
இன்று டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் 9 சிக்ஸர்கள் அடித்தால் ஐபிஎல் போட்டிகளில் அவர் அடித்த சிக்ஸர்களின் எண்ணிக்கை 200 ஆகிவிடும்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் 137 ஐபிஎல் போட்டிகள் விளையாடி 5076 ரன்கள் அடித்துள்ளார். இதில் 489 பவுண்டரிகளும் 191 சிக்ஸர்கர்கள் விளாசியுள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் தொடரில்11 போட்டிகள் விளையாடி 370 ரன்கள் அடித்துள்ளார்.
இந்த நிலையில் இன்று ஐபிஎல் தொடரின் 47 வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. மேலும் இந்த போட்டியில் டேவிட் வார்னர் 9 சிக்ஸர்கள் அடித்தால் ஐபிஎல் போட்டிகளில் அவர் அடித்த சிக்ஸர்களின் எண்ணிக்கை 200 ஆகிவிடும்.
இதனால் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளார்கள். மேலும் ஐபிஎல் போட்டிகளில் அதிகம் சிக்ஸர்கள் விளாசிய வீரர்களின் பட்டியலில் டேவிட் வார்னர் 8 வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.