‘தோனி-ரோஹித் அந்த விஷயத்துல ஒன்னு தான்’! முன்னாள் கிரிக்கெட் வீரர் பேச்சு..!
தோனி-ரோஹித் : இந்திய அணியின் ஆக்ரோஷமான பேட்ஸ்மேன்களை பட்டியலிடுகையில் ரோஹித் மற்றும் தோனியை நம்மால் அதில் சேர்க்காமல் இருக்க முடியாது. அதே போல் 2000 ஆண்டிற்கு மேல் இந்திய அணிக்கு கிடைத்த ஒரு அருமையான கேப்டன்களில் இந்த இருவரும் மிக முக்கியமானவர்கள்.
எம்.எஸ். தோனியின் கேப்டன்ஷிப்பில் இந்திய அணி விளையாடிய 20 ஓவர் உலகக்கோப்பை தொடர், 50 ஓவர் உலகக்கோப்பை தொடர், சாம்பியன்ஸ் ட்ராபி என காணாத கோப்பைகளே கிடையாது என்றே கூறலாம். அதே போல 17 வருடங்களாக இருந்த கோப்பை கனவை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த ஆண்டு பூர்த்தி செய்திருந்தது.
இந்நிலையில், சர்வேதச கிரிக்கெட் கவுன்சிலான, ஐசிசி (ICC) சமீபத்தில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவி சாஸ்திரியை பேட்டி எடுத்துள்ளனர். அதில் ரோஹித் ஷர்மாவையும், தோனியையும் பற்றி பேசி இருந்தார். அவர் பேசுகையில், “ரோஹித் ஒரு சிறப்பான கேப்டன் தோனியுடன் ஒப்பிடும் போது கேப்டன்ஷிப்பில் இருவரும் சமம் தான். இன்றைய நாளில் யார் சிறந்த கேப்டன் என்று என்னிடம் கேட்டால் இருவரும் ஒன்று தான்.
அதே போல் விளையாடும் போது தந்திரங்களை வைத்து பார்த்தல் தோனி அதில் சிறந்தவர் என்று மறந்துவிட முடியாது. மேலும், தோனி என்ன செய்தார், என்பதை அவர் வென்ற பட்டங்களே நமக்கு சொல்லும். அதே போல ரோஹித்தும் பெரிய தூரத்தில் இல்லை, அவருக்கு பின்னால் தான் இருக்கிறார். அவரும் அனைத்து கோப்பைகளை வெல்வார் என நம்புகிறேன்”, என ரவி சாஸ்திரி கூறி இருந்தார்.
Rohit Sharma vs MS Dhoni 🤔
Ravi Shastri analyses the captaincy of the two India greats on the latest episode of The ICC Review 👇https://t.co/VhCWokQiSW
— ICC (@ICC) August 1, 2024