தோனி ஓய்வு இந்தியாவுக்கு இழப்பு..! கபில்தேவ் உருக்கம்
- ரசிகபட்டாளத்தை கொண்ட இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் ஓய்வு குறித்த ஒயாத சர்ச்சை
- தோனி எப்பொழுது ஓய்வு பெற்றாலும் அது இந்திய அணிக்கு இழப்பு தான் என்று கபில்தேவ் உருக்கம்
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மிகச்சிறந்த வகையில் அணி வழிநடத்தியவர் கேம் செஞ்சர் என்ற பல பெயர்களுக்கு சொந்தக்காரராக திகழ்பவர் மஹிந்திர சிங் தோனி அன்மைக்காலமாக அவருடைய ஓய்வு குறித்த சர்ச்சை பேச்சுக்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன.ஆனால் இதற்கு தோனி தரப்பில் உறுதி செய்யப்படதா நிலையில் சமீபத்தில் 2020ம் ஆண்டுக்கான வீரர்களின் ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ வெளியிட்டது.
அந்த பட்டியலில் தோனியின் பெயர் இடம்பெறாதது பரவி வந்த யுகங்கள் எல்லாம் உறுதி செய்தன என்று கிரிக்கெட் விமர்கள் கருதிய நிலையில் இந்த பட்டியல் தோனியின் ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதோடு தோனியின் பெயர் ஒப்பந்த பட்டியலில் இடம்பெறாதது குறித்து பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வந்த நிலையில் எல்லோருக்கும் ஓய்வு என்பது தேவை தான் ஆனால் அதை முடிவு செய்வது காலம் தான் தவிர நெருக்கடியோ காழ்ப்புணர்ச்சியோ அல்ல என்று ரசிகர்கள் விமர்சிக்கின்றனர்.
தோனி ஓய்வு குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கபில் தேவ் கூறுகையில் தோனி ஓய்வு பெறுவது என்பது உறுதியான ஒன்று தான் ஆனால் அது எப்போது என்பது தான் தற்போது உள்ள கேள்வியாக உள்ளது.
அவர் எப்போது ஓய்வுபெற்றாலும் அது இந்தியாவுக்கு இழப்புதான் என்று உருக்கமாக தெரிவித்தார்.மேலும் தோனி பற்றி கூறிய கபில் இளம் வீரர்களின் திறமையை கண்டறிவதில் தோனி மிகவும் வல்லவர் என்று தோனியின் கேப்டன்ஷிப்பை கபில் தேவ் புகழ்ந்துள்ளார்.