இந்திய அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட தோனி…!முடிகிறதா தோனியின் ஆட்டம் …!அதிர்ச்சியில் ரசிகர்கள் …!

Default Image

20 ஓவர் போட்டிகளில் இருந்து தோனி தோனி அதிரடியாக  நீக்கப்பட்டுள்ளார்.
 
இந்தியாவுக்கு வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. அதேபோல் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.ஒரு நாள் தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் வெற்றியும்,இரண்டாவது ஒருநாள் போட்டி சமனிலும் முடிந்தது.பின்னர் மூன்று 20 ஓவர் போட்டிகளிலும் பங்கேற்கிறது.
இந்நிலையில் நேற்று  மூன்று 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்தது.
இந்திய அணி வீரர்கள் விவரம்(மூன்று 20 ஓவர் போட்டிகள் ) : ரோகித் ( கேப்டன் ),தவான் ,தினேஷ் ,ஸ்ரேயாஸ் அய்யர்,மனிஷ் பாண்டே ,பண்ட் ,குல்தீப்,க்ருனால் பாண்டியா , சாகல்,லோகேஷ் ராகுல் ,கலீல் அகமது,பூம்ரா,புவனேஸ்வர் குமார்,உமேஷ் ,சபாஷ் நதீம் ,வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
 
அதேபோல் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி வீரர்கள் விவரம்(மூன்று 20 ஓவர் போட்டிகள் ஆஸ்திரேலியாவுடன்):விராட் கோலி(கேப்டன் ), ரோகித் (துணை கேப்டன் ),தவான்,தினேஷ்,க்ருனால் பாண்டியர ,மனிஷ் பாண்டே ,பண்ட் ,குல்தீப்,ஸ்ரேயாஸ் அய்யர், சாகல்,லோகேஷ் ராகுல் ,கலீல் அகமது,பூம்ரா,புவனேஸ்வர் குமார்,வாஷிங்டன் சுந்தர்,உமேஷ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய அணி வீரர்கள் விவரம்(4 டெஸ்ட் போட்டிகள் ஆஸ்திரேலியாவுடன்): விராட் கோலி(கேப்டன் ), ரோகித்,விஜய் ,புஜாரா,ரகானே ,ஹனுமா விகாரி ,பண்ட் ,பார்திவ் பட்டேல் ,அஸ்வின்,ஜடேஜா ,குல்தீப்,முகமது சமி, இஷாந்த் ,லோகேஷ் ராகுல் ,பூம்ரா,புவனேஸ்வர் குமார்,உமேஷ்,பிரிதிவி ஷா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 20 ஓவர் போட்டிக்கு ரோகித் தலைமை ஏற்கிறார்.அதேபோல் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணி மற்றும் ஆஸ்திரேலியாவுடனான 20 ஓவர் போட்டிகளில் இருந்து தோனி நீக்கப்பட்டுள்ளார்.

இந்திய விக்கெட் கீப்பரும், முன்னாள் கேப்டனுமான தோனி கடந்த சில வருடங்களாக ரன் குவிக்க தடுமாறி வரும் நிலையில் நீக்கப்பட்டுள்ளார். அணியில் நிலையான இடத்தை பிடித்த பிறகு தோனி நீக்கப்படுவது இதுதான் முதல் முறை. இது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதுமட்டும் அல்லாமல் இனி வரும் அடுத்த ஒருநாள் தொடர்களுக்கான இந்திய அணியிலும் தோனி இடம்பெறுவாரா என்ற சந்தேகம் அவரது ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்