தமிழ் ரசிகரின் மஞ்சள் வீடு….”சாதாரண விஷயமல்ல”மகிழ்ந்த தோனி பாராட்டு

Default Image

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சிறப்பிக்கும் வகையில் தனது வீட்டையே மஞ்சள் நிறத்தில் மாற்றிய தமிழக ரசிகர்க்கு  தோனி பாராட்டு தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் அரங்கூரில் வசித்து வரும் கோபிகிருஷ்ணன் இவர் தோனி ரசிகர் இல்லை வெறியர் என்று தான் சொல்ல வேண்டும் ஆமாம் கோபி ஐ.பிஎல் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பே தனது வீட்டின் வெளிப்புறத்தில் தோனியின் படம் வரைந்து சுவர்கள் அனைத்திற்கு மஞ்சள் வர்ணம் தீட்டி சென்னை அணியின் மீதுள்ள தனது ஈடுபாட்டை காட்டினார்.மேலும் இந்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வலம் வந்தது.

சென்னை நடப்பு சீசனில் களத்தில் ஜொலிக்கவில்லை ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் ஆனால் சென்னையை அவர்கள் ஒரு போதும் வெறுக்கவில்லை.என்பதற்கு #cskforever என்ற ஹேஷ்டெக்கில் தங்களது அன்பை பதிவிட்டு தெறிக்கவிட்டனர்.

இந்நிலையில் கோபி கிருஷ்ணனின் அன்பு  குறித்து தோனி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீட்டையே மஞ்சள் நிறத்தில் மாற்றுவது எல்லாம் சாதாரண விஷயமல்ல என்று பதிவிட்டு தனது ரசிகர் மற்றும் குடும்பத்தினருக்கும்  பாராட்டு தெரிவித்தார்.

மேலும் தோனி தனது ட்விட்டர்,இண்ஸ்டாகிராமிலும் கோபியின் அன்பிற்கு பாராட்டு தெரிவித்து பகிந்துள்ளார்.அதில் மாற்றுவதை போல இதனை செய்ய முடியாது
என்று தோனி தெரிவித்துள்ளார்.

தோனி பாராட்டு தெரிவித்ததை சென்னை அணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்