இந்தியாவுக்காக தோனி இனி ஆடமாட்டார் – ஹர்பஜன் சிங்

இந்தியாவுக்காக தோனி இனி ஆடமாட்டார் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி குறித்து அன்மைக்காலமாக ஓய்வு குறித்த சர்ச்சை பேச்சுக்கள் உலா வந்து கொண்டிருக்கின்றது.ஆனால் இதற்கு தோனி தரப்பில் உறுதி செய்யப்படாதா நிலையில் சமீபத்தில் 2020ம் ஆண்டுக்கான வீரர்களின் ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ வெளியிட்டது.அந்த பட்டியலில் தோனியின் பெயர் இடம்பெறவில்லை .இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது .கடைசியாக நடைபெற்ற உலக கோப்பை தொடருக்கு பின்னர் தோனி சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை. இதன் பின் கோடைகால கொண்டாட்டமாக ஐபிஎல் தொடர் தொடங்க இருந்தது.
ஆனால் கொரோனா காரணமாக இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கடைசி 2 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது .எனவே ஐபிஎல் தொடரும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தோனியின் நிலை என்னவாகும் என்ற கேள்வி அதிக அளவில் உலவி வந்தது.இதற்குஇடையில் இன்ஸ்டாகிராமில் ரோகித் சர்மா, ஹர்பஜன் சிங் லைவ்வில் பேசிக்கொண்டிருந்தார்.அப்பொழுது ரசிகர் ஒருவர் , தோனி எப்போது களம் என்று கேள்வி எழுப்பினார்.இதற்கு பதில் அளித்த ரோகித், நீங்களே தோனியிடம் கேளுங்கள் என்று பதிலளித்தார்.இதற்கு பதில் அளித்த ஹர்பஜன், தோனி இனி இந்தியாவுக்காக ஆடமாட்டார் என்றே நான் கருதுகிறேன். இந்தியாவுக்கு ஆட விரும்ப மாட்டார் என்று நினைப்பதாக கூறினார்.