தோனி அணிக்கு தேவை என்றால் எடுத்துகொள்ளுங்கள் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி குறித்து அன்மைக்காலமாக ஓய்வு குறித்த சர்ச்சை பேச்சுக்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன.ஆனால் இதற்கு தோனி தரப்பில் உறுதி செய்யப்படதா நிலையில் சமீபத்தில் 2020ம் ஆண்டுக்கான வீரர்களின் ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ வெளியிட்டது.அந்த பட்டியலில் தோனியின் பெயர் இடம்பெறவில்லை .இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது .கடைசியாக நடைபெற்ற உலக கோப்பை தொடருக்கு பின்னர் தோனி சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை.
இதன் பின் கோடைகால கொண்டாட்டமாக ஐபிஎல் தொடர் தொடங்க இருந்தது.ஆனால் கொரோனா காரணமாக இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கடைசி 2 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது .எனவே ஐபிஎல் தொடரும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தோனியின் நிலை என்னவாகும் என்ற கேள்வி அதிக அளவில் உலவி வந்தது.
இந்நிலையில் தோனி குறித்து ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், தோனி மிகவும் திறமையான வீரர் .தோனியை, வெறும் ஐபிஎல் போட்டியை வைத்து மட்டுமே மதிப்பீடு செய்ய முடியுமா ?என்றும் இந்தியாவின் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கேப்டன்களில் தோனியும் முக்கியமானவர்.அவர் தகுதியானவரா, இல்லையா என்பதை பற்றி ஆராய வேண்டாம்.அவர் வேண்டும் என்றால் அவரை தேர்வு செய்து கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…