ஒரே போட்டியில் இரண்டு உலகசாதனை படைத்த தோனி !
நேற்றைய போட்டியில் டாஸ் வென்று தென்னாபிரிக்கா பேட்டிங் செய்தது.முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 227 ரன்கள் எடுத்தனர்.பின்னர் களமிறங்கிய இந்திய அணி 47.3 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 230 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் தோனி இரண்டு உலக சாதனை படைத்தார். சர்வதேசப் போட்டிகளில் கீப்பராக 600 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனை படைத்தார். இவருக்கு அடுத்தாக உள்ள அனைத்து வீரர்களும் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள்.
தோனி-600
பவுச்சர்-596
சங்ககாரா-499
கில்கிறிஸ்ட்-485
மேலும் இப்போட்டியில் மற்றொரு சாதனையும் தோனி படைத்தார் போட்டியின் போது 39.3 ஓவரில் தென்னாபிரிக்க அணியின் ஆண்டில் பெஹல்குவே பேட்டிங் செய்த போது சாஹல் பந்துவீச்சில் தோனி ஸ்டெம்பிங் அவுட் செய்தார். உலக கோப்பையில் விக்கெட் கீப்பராக அதிக ஸ்டெம்பிங் அவுட் செய்த பட்டியலில் தோனி மூன்றாம் இடத்தில் உள்ளார்.
சங்ககாரா-54
கில்கிறிஸ்ட்-52
தோனி-33
மெக்கலம் -32
பவுச்சர்-31