கடைசியாக ஒரு முறை மோதிக்கொள்ளும் தோனி – கோலி ? மனம் நெகிழ்ந்து பேசிய விராட் கோலி !
சென்னை : இன்று ஐபிஎல் தொடரில் சென்னை அணியும் மற்றும் பெங்களூரு அணியும் மோத உள்ளன. இந்தப் போட்டியில் கிரிக்கெட் ஜாம்பவான்களான தோனியும், விராட் கோலியும் இணைந்து விளையாடுவதே கடைசி போட்டியாக இருக்கலாம் என்று ரசிகர்கள் கூறி வரும் நிலையில் இது குறித்து விராட் கோலி மனம் திறந்து பேசி இருக்கிறார்.
இன்று நடைபெறும் பெங்களுரு, சென்னை போட்டியானது பெங்களூரு அணிக்கு ஒரு வாழ்வா சாவா போட்டியாகும். பெங்களூரு அணிக்கு நிறைய நெருக்கடிகளை கொண்டு இன்றைய போட்டியானது நடைபெற உள்ளதாலும், தோனியும் கோலியும் கடைசியாக ஒரு போட்டியில் ஒரே மைதானத்தில் விளையாடுவதாலும் இன்று நடக்கவிருக்கும் போட்டியானது கிட்ட தட்ட ஒரு ஐபிஎல் இறுதி போட்டிக்கு வரும் எதிர்ப்பார்ப்பு அளவிற்கு எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த சீசனுடன் தோனி ஐபிஎல் தொடரிலும் ஓய்வு பெற உள்ளதாக பேச்சுகள் நிலவும் நிலையில் இன்றைய போட்டிதான் தோனியையும், கோலியையும் இறுதியாக நாம் ஓரே மைதானத்தில் பார்க்க கூடும் என ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இதனை பற்றி போட்டிக்கு முன்பு ஜியோ சினிமாவின் இன்சைட் அவுட் (Inside Out) என்ற நிகழ்ச்சியில் கொடுத்த பேட்டி ஒன்றில் விராட் கோலி நெகிழ்ந்து பேசி இருந்தார்.
அவர் இதை பற்றி பேசுகையில், “தோனியும், நானும் சேர்ந்து விளையாடும் கடைசிப் போட்டி இதுவாக கூட இருக்கலாம். இந்த போன்ற பெரிய போட்டியில் தோனியை பார்ப்பது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஒரு தருணமாக இருக்கும். நாங்கள் இருவரும் இந்திய அணிக்காக பலமுறை கூட்டணியிட்டு ரன் குவித்திருக்கிறோம். அதே போல தோனி தனி ஆளாக நின்று பல போட்டிகளில் வெற்றி பெற்றுக் கொடுத்து இருக்கிறார்.
அதை நாம் பலமுறை பார்த்து இருக்கிறோம். எனவே, ரசிகர்கள் எங்கள் இருவரையும் சேர்த்து இந்த போட்டியில் பார்ப்பது அவர்களது வாழக்கையில் ஒரு மிகப்பெரிய முக்கிய தருணமாக அமையும்” என ஜியோ சினிமாவுக்கு அளித்த பேட்டியில் விராட் கோலி மனம் நெகிழ்ந்து பேசி இருந்தார்.
Reminiscing the fond memories 🤩
Watch King Kohli take a trip down the memory lane in a special edition of Inside Out 👉 https://t.co/L4ALcHkzGZ#TATAIPL #JioCinema | @imVkohli | @ImRaina
— JioCinema (@JioCinema) May 18, 2024