நேற்றைய போட்டியில் இந்திய அணியும் , வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதியது . இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்றது.இப்போட்டி டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 268 ரன்கள் எடுத்தது.பின்னர் இறங்கியவெஸ்ட் இண்டீஸ் அணி 34.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 143 ரன்கள் எடுத்து 125 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
நேற்றைய போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி 61 பந்தில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.இப்போட்டியில் ஆட்டம் தொடக்கத்தில் மிகவும் பொறுமையாக விளையாடிய தோனி கடைசி 16 பந்தில் தனது அதிரடி ஆட்டத்தை காட்டினர்.
தோனி இப்போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் இந்திய அணி வீரர்களில் அதிக அரைசதம் வீரர்களின் பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்து உள்ளார்.இதுவரை தோனி விளையாடிய போட்டிகளில் 72 அரைசதம் அடித்து உள்ளார்.
முதல் இடத்தில் சச்சின் 96 , இரண்டாம் இடத்தில் டிராவிட் 83 அரைசதம் அடித்தும் உள்ளனர்.தற்போது மூன்றாவது இடத்தில் 72 அரைசதம் அடித்து தோனி உள்ளார்.
சச்சின் – 96
டிராவிட் – 83
தோனி – 72 *
கங்குலி – 72
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…