கிரிக்கெட்டில் ஹெலிகாப்டர் தோனி என்று அன்போடு சிறுவர் முதல் எல்லோராலும் அழைக்கப்பட்டவர் தோனி.இந்திய முன்னாள் கேப்டன் தோனி சமீபகாலங்களாக தந்து பேட்டிங்கில் சொதப்பி வருகிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே இந்த நிலையில் அவருக்கு ஓய்கு கொடுத்து தொடர்ந்து விளையாட அவர் அனுமதிக்கப்படவில்லை இதனையடுத்து உலகக்கோப்பைக்கு தோனி வேண்டுமா வேண்டாமா..? என்று விவாதத்தை கிளப்பி அதை நேர்த்தியாக வாதிட்டு வருகின்றனர்.இந்த விவாதம் தோனிக்கு ஆதரவாகவும்,எதிர்ப்பாகவும் கிளம்பியுள்ளது.
கிரிக்கெட்டில் தல என்று வர்ணிக்கப்படும் தோனி 2018-ம் ஆண்டில் 13 இன்னிங்ஸ்களில் வெறும் 275 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறார்.இந்த நிலையில் இடையில் அடிக்கடி ஒய்வு கொடுக்கப்பட்டு அவரை ஓரம் கட்டிய நிலையில் அவரை அணியில் இருக்க வேண்டும் வேண்டாமா..?என்று விவாதிட்டு வருகின்றனர். தோனியின் இந்த ஆட்டம் குறித்து மூத்த முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கரே தோனி முதலில் உள்நாட்டுக் கிரிக்கெட்டில் ஆடி பயிற்சி எடுத்து கொள்ள வேண்டும்.