அவருடைய பக்கத்தில் கூட எவராலும் நிற்க முடியாது…!!விளாசிய முன்.கிரிக்கெட் வீரர்..!!
கிரிக்கெட்டில் ஹெலிகாப்டர் தோனி என்று அன்போடு சிறுவர் முதல் எல்லோராலும் அழைக்கப்பட்டவர் தோனி.இந்திய முன்னாள் கேப்டன் தோனி சமீபகாலங்களாக தந்து பேட்டிங்கில் சொதப்பி வருகிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே இந்த நிலையில் அவருக்கு ஓய்கு கொடுத்து தொடர்ந்து விளையாட அவர் அனுமதிக்கப்படவில்லை இதனையடுத்து உலகக்கோப்பைக்கு தோனி வேண்டுமா வேண்டாமா..? என்று விவாதத்தை கிளப்பி அதை நேர்த்தியாக வாதிட்டு வருகின்றனர்.இந்த விவாதம் தோனிக்கு ஆதரவாகவும்,எதிர்ப்பாகவும் கிளம்பியுள்ளது.
கிரிக்கெட்டில் தல என்று வர்ணிக்கப்படும் தோனி 2018-ம் ஆண்டில் 13 இன்னிங்ஸ்களில் வெறும் 275 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறார்.இந்த நிலையில் இடையில் அடிக்கடி ஒய்வு கொடுக்கப்பட்டு அவரை ஓரம் கட்டிய நிலையில் அவரை அணியில் இருக்க வேண்டும் வேண்டாமா..?என்று விவாதிட்டு வருகின்றனர். தோனியின் இந்த ஆட்டம் குறித்து மூத்த முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கரே தோனி முதலில் உள்நாட்டுக் கிரிக்கெட்டில் ஆடி பயிற்சி எடுத்து கொள்ள வேண்டும்.
அவர் நேரடியாக அவுட் ஆஃப் பார்மில் போட்டிகளில் இறங்குவது கூடாது தவறு என்று தெரிவித்தவர் கவாஸ்கர் ரசிகர்களின் ஒருமித்த எதிர்ப்பு குரலால் திடீரென பல்ட்டி அடித்து தோனியின் உதவி கோலிக்குத் தேவை என்று நா கூசாமல் தெரிவித்தார்.
மேலும் இந்திய பவுலர்களிடம் இந்தியில் பேசி அவர்களைய் வேலை வாங்குகிறார் என்று வக்காலத்து வாங்கி பேசினார்.இதற்கு கடுமையான எதிர்ப்பை தோனியின் ரசிகர் வட்டாரத்தில் இருந்து பாய்ந்த நிலையில் ரசிக வட்டாரம் கோலி மட்டும் என்ன வீரர்களிடம் தெலுங்கு அல்லது தமிழில பேசுகிறார் அவரும் இந்தியில் தான் பேசுகிறார் என்று வசைபாடியது ரசிக வட்டாரம்.
இந்த நிலையில் இந்தியாவின் முன்னாள் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா தோனி குறித்து தெரிவித்தார் அதில் ரிஷப் பந்த் தினேஷ் கார்த்திக் ஆகியோர் உள்ளனர். இருவரும் ஓரளவுக்கு நன்றாகவே ஆடினர். ஆனால் தல தோனி, தோனி தான் அவருடைய பக்கத்தில் கூட இங்க நிற்க முடியாது.அவர் பக்கத்தில் கூட யாரும் வர முடியாது. கிரிக்கெட் வீரராக மட்டுமல்ல அவர் சிறந்த மனிதரும் கூட சிறந்த விக்கெட் கீப்பரும் கூட.இது இந்திய பவுலர்களான சாஹல், குல்தீப் போன்ற வீரர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். ரொம்ப முக்கியமாக விராட் கோலிக்கே கூட உதவிகரமாக இருக்கும்.
மேலும் அணியில் தோனிக்குத் மட்டும் தான் என்ன செய்யவேண்டும் என்று தெரியும். ஆசியக் கோப்பை மற்றும் மேற்கிந்திய தொடரிலும் அவர் சரியாக விளையாடவில்லை என்றாலும் இன்னும் 2 மாதங்கள் தோனிக்கு கால அவகாசம் உள்ளது. மேலும் ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டிகளில் அவர் நன்றாக ஆடுவார் என்றும் தோனியைப் பற்றி நான் கவலைப்பட வேண்டியதில்லை. அவர் குல் கேப்டன் என்று பெருமிதம் பொங்க தெரிவித்தார்.
DINASUVADU