IPL 2024 : இதுலயும் ‘தல’ தான்பா ஃபஸ்டு ..! ஆனா ரன்ஸ் எவ்ளோன்னு தெரியுமா ..?

MSDhoni [file image]

IPL 2024 : ஐபிஎல் தொடரில் பலவித சாதனைகளை சென்னைய அணியின் கேப்டனான எம்.எஸ்.தோனி செய்திருக்கிறார். அதில் ஒன்று தான் டெத் ஓவர்களில் அதிக ரன்கள் எடுத்த வீரர் எனும் சாதனை, டெத் ஓவர் என்பது 16 ஓவர் முதல் 20 ஓவர் வரை கொண்ட 5 ஓவர்கள் ஆகும். இவர் டெத் ஓவர்களில் களமிறங்கினாலே மைதானத்தில் உள்ள ரசிகர்களுக்கு அது வானவேடிக்கையாகவே அமைந்திருக்கும். மேலும், டெத் ஓவர்களில், தோனி களத்தில் இருந்தாலே எதிரணி பவுலர்களும் சற்று கதி கலங்கியே நிற்பார்கள்.

Read More :- ‘தோனியும் அதை செய்து இருக்கிறார்… ரோஹித் அவரை விட 10 அடி முன்னே’ – மனம் திறந்த அஸ்வின்

இந்த ஐபிஎல் தொடர்களில் 5 முறை கோப்பையை வென்றதோடு அதிக முறை இறுதி போட்டிக்கும் சென்னை அணியை அழைத்து சென்றுருக்கிறார். தற்போது, டெத் ஓவர்களில் அதிக ரன்கள் அடுத்தவர்களின் பட்டியலை பார்க்கும் போது தோனி முதலிடத்தில் இருக்கிறார் என்று நமக்கு தெரிந்தாலும், அவர் எத்தனை ரன்கள் அந்த டெத் ஓவர்களின் எடுத்துள்ளார் என்பதை பார்க்கலாம்.

மேலும், இந்த டெத் ஓவர்களில் அதிக ரன்கள் அடித்த முதல் 5 வீரர்களின் பட்டியலையும் பாப்போம். தோனி ஐபிஎல் தொடர்களில் மொத்தம் 161 போட்டிகளில் விளையாடி 3987 ரன்களை அடித்து முதலிடத்தில் உள்ளார். இவர் மேலும் ஒரு 13 ரன்களை டெத் ஓவர்களில் எடுத்தால் 4000 ரன்களை கடந்து புதிய சாதனையை ஐபிஎல் தொடரில் படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More :- IPL 2024 : ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் ஆரி புரூக் ! டெல்லி அணி அதிருப்தி ..!

டெத் ஓவர்களில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் : 

  • எம்.எஸ். தோனி   – 3987 ரன்கள் – 161 இன்னிங்ஸ்
  • கீரன் போலார்ட்   – 3579 ரன்கள் – 117 இன்னிங்ஸ்
  • ஏபி டி வில்லியர்ஸ் – 3121 ரன்கள் – 75 இன்னிங்ஸ்
  • தினேஷ் கார்த்திக் – 2710 ரன்கள் – 105 இன்னிங்ஸ்
  • ரவீந்திர ஜடேஜா – 2535 ரன்கள்   – 122 இன்னிங்ஸ்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்