‘இந்தியாவுக்கு கிடைத்த பெஸ்ட் கேப்டன் தோனி தான்’ !! தோனியை புகழ்ந்து தள்ளிய கவுதம் கம்பிர் ..!
ஐபிஎல் 2024 : இந்தியாவின் முன்னாள் கேப்டன் ஆன எம.எஸ்.தோனியை முன்னாள் கிரிக்கெட்டரான கவுதம் கம்பிர் புகழ்ந்து பேசி உள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பிர் தற்போது கொல்கத்தா அணிக்கு வழிகாட்டியாக இந்த ஐபிஎல் தொடரில் இருந்து வருகிறார். இதனால் இந்த தொடரில் கொல்கத்தா அணி இது வரை 3-ல் 3 வெற்றிகளை பெற்று நன்றாக விளையாடி கொண்டு வருகிறது. மேலும், இன்றைய ஐபிஎல் போட்டியாக சென்னை அணியுடன் சேப்பாக்கில் மோதவுள்ளது. இந்நிலையில் கவுதம் கம்பிர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்க்கு அளித்த ஒரு நேர்காணலில் தோனியை புகழ்ந்து பேசி இருந்தார்.
அவர் பேசுகையில், “இன்றைய போட்டியில் கண்டிப்பாக நாங்கள் வெற்றி பெற வேண்டும் என்றே நான் நினைப்பேன். சென்னை அணியிலும் எனது நணபர்கள் இருக்கிறார்கள் ஆனால் போட்டி என்று வந்துவிட்டால் அதில் நான் வெற்றி பெற்று திரும்ப வேண்டும் என்று நினைப்பேன். நீங்கள் இதை தோனியிடம் கேட்டாலும் அவரும் அதை தான் சொல்லுவார். தோனி பற்றி கூற வேண்டும் என்றால் அவர் ஒரு அற்புதமான கேப்டன் அவரை போல கேப்டன் இந்திய அணிக்கு இனிமேல் கிடைக்க மாட்டார்கள் என்றே கூறுவேன்.
தோனி போல ஒரு கேப்டனால் 3 ஐசிசி கோப்பைகளை வெல்ல முடியாது, ஒரு கேப்டனாக நீங்கள் உள்ளுரில் நடக்கும் கோப்பைகள் வாங்கலாம். ஒரு கேப்டனாக நீங்கள் ஐபிஎல் கோப்பைகளை வாங்கலாம் ஆனால் தொடர்ந்து 3 ஐசிசி கோப்பைகளை வாங்க வேண்டும் என்றால் அது தோனியால் தான் சாத்தியம்.
மேலும், ஐபிஎல் தொடரிலும் அவரை ரசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது, மேலும் போட்டியில் இவர் தந்திரங்கள் எல்லாமே சிறப்பாக அமையும். இவருக்கு நிகரான கேப்டன் இவர் மட்டுமாக தான் இருப்பார். மேலும், ஒரு ஓவருக்கு 20 ரன்கள் என்றாலும் சரி, டெத் ஓவர்களில் அடிக்க கூடிய ஸ்கோர் இருந்தாலும் சரி இவர் களத்தில் இருந்தால் கண்டிப்பாக அந்த போட்டியை முடித்து வைப்பார்”, என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸின் ஒரு நேர்காணலில் இவர் கூறி இருந்தார்.
Game recognises game! ????@GautamGambhir talks about @MSDhoni‘s tactical genius, and why he’s more determined than ever to win when he comes up against him and @Chennaiipl! ????
Will Gambhir + @ShreyasIyer15 triumph tactically over Dhoni + #RuturajGaikwad tonight? ????
Tune in to… pic.twitter.com/kvxi5vinzC
— Star Sports (@StarSportsIndia) April 8, 2024