தல மனசு தங்கம்யா! காலில் விழுந்த ரசிகருக்கு தோனி செய்யும் உதவி?

Dhoni Fan Interview [file image]

எம்.எஸ்.தோனி : சிஎஸ்கே போட்டியின் போது, காலில் விழுந்த ரசிகர் நேற்று ஃபோகஸ்டு இந்தியனுக்கு அளித்த பேட்டியில் அந்த சம்பவம் குறித்து பகிர்ந்துள்ளார்.

நடந்து முடிந்த இந்த ஐபிஎல் தொடரின் 59-வது போட்டியாக மே-10 ம் தேதி அன்று சென்னை அணியும், குஜராத் அணியும் மோதினார்கள். இந்த போட்டியில் குஜராத் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இந்த போட்டியில் 2-வது பேட்டிங்கில் சென்னை அணி மைதானத்தில் இருக்கும் பொழுது களத்தில் தோனியும், ஷரதுல் தாகூரும் இருப்பார்கள்.

அப்போது மைதானத்திற்குள் தோனியின் ரசிகர் ஒருவர் அவரை காண ஓடி வருவார்.அவர் தோனியை கண்டவுடன், அவரது காலில் விழுந்து வணங்கியிருப்பார். அதன் பிறகு தோனி அவரது தோள் மீது கைபோட்டு கொண்டு அன்பாக பேசுவார். அதன் பின் மைதானத்தில் இருந்த காவலர்கள் அவரை அழைத்து சென்றுவிடுவார்கள்.

அந்த போட்டி முடிந்த அந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி கொண்டிருந்தது. தற்போது, தோனியின் காலில் விழுந்த அந்த ரசிகர் ஃபோகஸ்டு இந்தியனுடன் (Focused Indian) ஒரு வீடியோவில் அந்த சம்பவம் குறித்தும், தோனி அவரிடம் பேசியது குறித்தும் அவருடன் பகிர்ந்துருப்பார்.

அந்த வீடியோவை ஃபோகஸ்டு இந்தியன், அவரது X தளத்தில் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில் தோனியின் ரசிகர் பேசுகையில்,”நான் அவரை கண்டவுடன் சந்தோசத்தின் உச்சிக்கு சென்றுவிட்டேன் மேலும், எனது கைகளை தூக்கி அவரை துரத்தினேன். அவரது காலில் விழுந்து வணங்கினேன். அப்போது என் கண்களில் தானாகவே கண்ணீர் வந்தது.

அந்த சமயம் அவர் என்னிடம் இருக்கும் பிரச்னையை அடையாளம் கண்டு என்னிடம் ‘நீ ஏன் அதிகமாக மூச்சுவிடுகிறாய்?’ என்று கேட்டார். நான் அவரிடம் எனக்கிருக்கும் மூச்சுத்திணறல் பிரச்சனையை குறித்து கூறினேன். அதற்கு அவர் ‘உனக்கு எந்த பிரச்சனையும் வராது, உன் அறுவை சிகிச்சையை நான் பார்த்துக்கொள்கிறேன், நீ கவலைப்படாதே.

இவர்கள் உன்னை ஒன்றும் செய்ய மாட்டார்கள்’ என கூறினார். மேலும், என்னை பாதுக்காப்பாக கொண்டும் செல்லும் படி கேட்டுக்கொண்டார். இதனால் பாதுகாவலர்களும் என்னை எதுவுமே செய்யாமல் பத்திரமாக கொண்டு சென்றனர். இதனால் தான் மக்கள் தோனியை ‘தல’ என்று அழைக்கிறார்கள்”, என்று கூறி இருந்தார்.

இந்த வீடியோ தற்போது தோனி ரசிகர்களிடையே வைரலாகி கொண்டு வருவதுடன், ரசிகர்கள் பகிர்ந்தும் வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்