தல என்ற சொல்லே..என்னை சிலிர்க்க வைக்கிறது…பெருமிதம் பொங்க ரசிகர்களை புகழ்ந்த தோனி
என்னை தல என்று அவர்கள் அழைக்கும்போது என் மீது வைத்திருக்கும் அன்பு பிரதிப்பலிக்கிறது என பெருமிதம் பொங்க தோனி தனது ரசிகர்ளை புகழ்ந்துள்ளார்.
இங்கிலாந்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ந்டந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பின் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியில் பங்கேற்காமல் தொடர் ஓய்வில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனிஇருந்து வருகிறார்.இவரை போட்டியில் காண அவருடைய ரசிகர்கள் ஆர்வம் காட்டிய போதும் தோனி எந்த வித போட்டியிலும் பங்கேற்காமல் இருந்து வந்தார்.
இதனால் அவருடைய ரசிகர்கள் அப்செட்டில் இருந்த நிலையில் அவர்களில் வயிற்றில் பாலை வார்க்கும் வண்ணமாக இந்தாண்டு ஐபிஎல் குறித்த அறிவிப்பு வெளியானது அதில் சென்னை அணி சார்பில் தோனி களமிரங்குவார் என்ற அறிவிப்பு ரசிகர்களின் மனதில் இன்ப வெள்ளமாக பாய்ந்தது என்று தான் சொல்ல வேண்டும் காரணம் தோனி ஐபிஎல்-லில் பங்கேற்பதை சந்தேகம் தான் என்று ஒரு குரூப் கூறி கொண்டு திரிந்தது இந்நிலையில் தான் ரசிகர்கள் மத்தியில் தோனி களத்திற்கு வருவாரா? என்ற கேள்வி முனுமுனுக்கப்பட்டது.
நடப்பாண்டிற்காக ஐபிஎல் தொடர் ஆனது வரும் 29-ம் தேதி தொடங்க உள்ளது 20 தொடரின் 13-வது சீசன் ஆகும்.போட்டி தொடங்க உள்ள நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தனது பயிற்சியை தொடங்கினார் தோனி.இந்த புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதலங்களில் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.
சென்னையையும் தோனியையும் எப்போது பிரிக்க பார்க்க முடியாது அவ்வாறு தான் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் சிஎஸ்கே அணியுடனான தனது உறவு குறித்து பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தோனி பகிர்ந்து உள்ளார்.அதில் சென்னை அணி என்னை எல்லாவற்றிலும் மேம்படுத்திட உதவியது. தனி மனிதனாக இருந்தாலும் சரி இல்லை கிரிக்கெட் வீரராக இருந்தாலும் சரி சில சூழ்நிலைகளை கையாளுவது அது களத்திலும் சரி, இல்லை வெளியிலும் சரி.சென்னை ரசிகர்கள் என்னை தல என்று அழைப்பதை நான் சிறப்பாக உணர்கிறேன்.
தல என்று அவர்கள் அழைக்கும்போது என் மீது அவர்கள் வைத்திருக்கும் அன்பு பிரதிப்பலிக்கிறது. நான் சென்னையில் இருக்கும்போது சரி இல்லை தென் இந்தியாவில் இருக்கும்போது சரி அவர்கள் என் பெயரை சொல்லி அழைப்பதில்லை. தல என்று தான் அன்போடு அழைக்கிறார்கள் என்று தனது ரசிகர்ள் கூறித்து பெருமிதம் பொங்க உருக்கமாக தோனி தெரிவித்தார்.