ஐபிஎல் பொறுத்தே தோனி இந்திய அணியில் சேர்க்கப்படுவது தவறான கணிப்பு – ஆகாஷ் சோப்ரா

Default Image

தோனி ஐபிஎல் போட்டியில் விளையாடுவது பொறுத்துதான் அவர் மீண்டும் இந்திய அணிக்குள் சேர்க்கப்படுவார் என்ற தவறான கணிப்பு முற்றிலும் தவறு என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி கடந்த 2019 ஆம் ஆண்டு நியூஸ்லாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதிக்கு பின்னர் இந்திய அணிக்காக எந்த போட்டியிலும் திரும்ப விளையாடவில்லை. இந்த ஆண்டு நடைபெற இருந்த ஐபிஎஸ் போட்டியில் தோனி விளையாடுவார், அதைப்பொறுத்தே இந்திய அணியில் மீண்டும் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து போட்டிகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனால் தோனி மீண்டும் இந்திய அணியில் விளையாடுவது, அதுவும் டி20 உலகக்கோப்பையில் விளையாடுவது சந்தேகத்திற்குரியதாக மாறிவிட்டது. இதை குறித்து இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான ஆகாஷ் சோப்ரா இதை முற்றிலும் மறுத்துள்ளார். அவர் கூறுகையில், தோனி ஐபிஎல் போட்டியில் விளையாடுவது பொறுத்துதான் அவர் மீண்டும் இந்திய அணிக்குள் சேர்க்கப்படுவார் என்ற கணிப்பு முற்றிலும் தவறானது என்று கூறியுள்ளார்.

ஒருவேளை தோனி அணியில் சேர்ப்பது என்றால், அவர் எப்படிப்பட்ட கிரிக்கெட் வீரர் என்பதும், அவரது கிரிக்கெட் அனுபவம் குறித்தும், அவர் ஒரு கிரிக்கெட்டராக சாதித்தது பற்றியும் அனைவர்க்கும் தெரியும். அதன் அடிப்படையில் தான் தேர்வு செய்வார்கள் தவிர, ஐபிஎல் மூலம் தேர்வு செய்யப்படுவார் என்பது முற்றிலும் தவறானது என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தோனி இந்திய அணிக்கு தேவை என அணி நிர்வாகம் நினைத்தால், அதேசமயம் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்று தோனி நினைத்தால் மட்டுமே நடக்கும்.

தொடர்ந்து பேசிய அவர், ஐபிஎல் போட்டியில் அவர் விளையாடுவதை பொறுத்துதான் டி20 உலகக் கோப்பைக்கான போட்டியில் சேர்ப்பார்கள் என்று கூறுவது தவறு. என் கணிப்புப்படி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டி20 உலக கோப்பை தள்ளிப்போகும் என்றும் இதனால் தோனிக்கு ஒரு வயது அதிகரிக்கும், அத்துடன் அவர் விளையாடாத காலம் 18 மாதங்கள் ஆகும் என்று குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில் வேண்டுமானால் அவரை அணியில் தேர்வு செய்யாமல் விடலாம் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்