டி 20 போட்டிகளில் தோனி சாதனையை முறியடித்த ரிஷாப் பந்த்!
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான மூன்று டி20 போட்டி நடைபெற்றது. முதல் இரண்டு போட்டி புளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் நடைபெற்றது. மூன்றாவது போட்டி கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச முடிவு செய்தது. இதை தொடர்ந்து பேட்டிங்கை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 146 ரன்கள் அடித்தது.
பின்னர் 147 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 27 ரன்னில் தொடக்க வீரர்கள் இரண்டு பேரையும் இழந்து பரிதாப நிலையில் இருந்தது.பின்னர் இறங்கிய கோலி , ரிஷாப் பந்த் இருவரும் இணைந்து இந்திய அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர்.
இறுதியாக இந்திய அணி 19.1 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 150 ரன்கள் அடித்தது. 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.இப்போட்டியில் ரிஷாப் பந்த் கடைசிவரை அட்டமிழக்காமல் 65 ரன்கள் குவித்தார்.
இதன் மூலம் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களில் ஒரு டி 20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த சாதனையை படைத்து உள்ளார்.இதற்கு முன் தோனி அடித்த 56 ரன்கள் அதிகபட்சமாக இருந்தது.தற்போது தோனியின் சாதனையை ரிஷாப் பந்த் முறியடித்து உள்ளார்.
முதல் இரண்டு டி 20 போட்டிகளில் ரிஷாப் பந்த் 0 , 4 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.