விராட்கோலியிடம் திறமை குறைந்த அணியை விட்டு சென்றது தோனி என்று கௌதம் கம்பீர் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பிரபலமான வீரரான கௌதம் கம்பீர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் தோனி மற்றும் விராட் கோலி பற்றி கூறியுள்ளார், அதில் அவர் கூறியது, திறமை குறைந்த அணியை கேப்டன் தோனி விராட் கோலியிடம் ஒப்படைத்துள்ளார்.
தோனி கேப்டனாக இருக்கும் பொழுது அவருக்கு திறமையான அணி வீரர்கள் கொடுக்கப்பட்டது, அதனால் தான் அவரால் பல கோப்பை களை வெல்ல முடிந்தது, ஆனால் கோலி கேப்டனாக இருக்கும் பொழுது அவருக்கு திறமை இழந்த அணி கொடுக்கப்பட்டது அதனால் ஐசிசி கோப்பைகளை வெல்ல விராட் கோலியால் வெல்ல முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.
விராட் கோலி கடந்த 2014 ஆண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் மேலும் 2017 ம் ஆண்டு அணைத்து போட்டிகளிலும் கேப்டனாக பொறுப்பேற்றார். இதுவரை அவருடைய கேப்டன்ஷியல் விளையாடப்பட்ட 55 போட்டிகளில் கிட்ட தட்ட 33 போட்டிகளில் வெற்றி பெற்று அதிகமான டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றவர் என்ற பெருமை பெற்றவர் என்றும் கூறியுள்ளார்.
அதற்கு பிறகு பேசிய அவர் விராட் கோலியின் மீது ஐசிசியின் கோப்பைகளை வெற்றி கொள்ளவில்லை என்ற குற்றசாட்டு உள்ளது, மேலும் இதனால் கோலியின் கேப்டன்ஷிப் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது என்றும் கௌதம் கம்பீர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : ஒருபக்கம் அரசியல் சட்டத்துக்கு விழா மறுபுறம் அம்பேத்கருக்கு அவதூறு என்பதே பாஜகவின் பசப்பு அரசியல் என விமர்சித்தும்,…
டெல்லி: பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று குவைத் புறப்பட்டுச் சென்றார். அங்கு, பயான் அரண்மனையில் அவரை தங்கவைத்து…
திருப்போரூர் :செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் கந்தசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கடந்த அக்டோபர் மாதம் சென்னையை சேர்ந்த…
ஆந்திரா: ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் யண்டகண்டி என்ற பகுதியில் வசிக்கும் துளசி என்ற பெண்ணின் வீட்டிற்கு வந்த…
சென்னை : வந்துச்சே வசூல் மழை தான்...வந்துச்சே வசூல் மழை தான்... என்கிற அளவுக்கு புஷ்பா 2 திரைப்படத்தின் வசூலானது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்க முதலே குறைந்து வந்த நிலையில், இன்று ஒரே நாளில்…