‘முடிவெடுப்பது நான் அல்ல’.., ஒருவழியாக ஓய்வு குறித்து மௌனம் கலைத்த தோனி.!

நான் ஓய்வு பெறுகிறேனா இல்லையா என்பதை உடல்தான் தீர்மானம் செய்ய வேண்டும் என்று தோனி பேசியிருக்கிறார்.

MS Dhoni

சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது வயது அதிகரித்து வருவதால், இந்த சீசனுக்குப் பிறகு எம்எஸ் தோனி ஓய்வு பெறுவாரா? என்று கேள்வி தொடர்ந்து எழுகிறது.

இதனிடையே, நேற்றைய தினம் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்காக எம்.எஸ். தோனியின் பெற்றோர் சென்னை வந்தடைந்ததால், இது தோனியின் கடைசி போட்டியாக இருக்கலாம் என்று ஒவ்வொரு ரசிகரும் அஞ்சத் தொடங்கினர். இது நடக்கவில்லை என்றாலும், தோனி இது குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை, ஆனால் இப்போது ஓய்வு குறித்து அவரது கருத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

டெல்லி அணிக்கு எதிரான போட்டி முடிந்த ஒரு நாளுக்குப் பிறகு, தோனியிடமிருந்து ஓய்வு குறித்த கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது. அதாவது,  யூடியூபர் ராஜ் ஷமானியின் பாட்காஸ்டில் இதைப் பற்றிப் பேசிய தோனி, அதைப் பற்றி யோசிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

ஓய்வு குறித்த கேள்விக்கு பதிலளித்த தோனி, “இப்போது இல்லை. நான் இன்னும் ஐபிஎல் விளையாடி வருகிறேன். நான் ஆண்டுக்கு ஒருமுறைதான் விளையாடுகிறேன். அடுத்த ஆண்டு விளையாட வேண்டுமா இல்லையா என்பதை தீர்மானிக்க இன்னும் 10 மாதங்கள் உள்ளன. அப்போது உடல் திடத்தைப் பொறுத்து முடிவு செய்யலாம்.

“தனக்கு இப்போது 43 வயது, ஜூலை மாதம் இந்த ஐபிஎல் சீசன் முடிவதற்குள் 44 வயதாகிவிடும்.  நான் இன்னும் ஒரு வருடம் விளையாட வேண்டுமா இல்லையா என்பதை முடிவு செய்ய எனக்கு 10 மாதங்கள் உள்ளன. நான் ஒய்வு குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை. நான் ஓய்வு பெறுகிறேனா இல்லையா என்பதை உடல்தான் தீர்மானம் செய்ய வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்