பல மாற்றங்கள் செய்த போதிலும் முடிவு என்னவோ மாறவில்லை என்று சென்னை அணி கேப்டன் தோல்வி குறித்து விளக்கமளித்துள்ளார்.
ஐபிஎல்2020 தொடரின் 37வது லீக் ஆட்டம் நேற்று நடைபெற்றது.இந்த ஆட்டத்தில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை தக்க வைக்க சென்னை – ராஜஸ்தான் அணிகள் பலபரீட்சை நடத்தியது.
இப்போட்டியில் 7விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வி அடைந்து ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை அளித்தது. சென்னை அணி தோல்வி அடைந்ததால், பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாயுப்பை இழந்துள்ளது.
ராஜஸ்தான் அணியிடம் தோல்வியை தழுவிய பிறகு கேப்டன் டோனி தோல்வி கூறியதாவது:-
முதல் இன்னிங்ஸை போல இரண்டாவது இன்னிங்ஸ்-லிலும் சுழற்பந்துக்கு சாதகமாக அமையவில்லை. மேலும் வேகப்பந்து வீச்சிற்கே கை கொடுத்தது.
கடந்த 5 போட்டிகளில் நாங்கள் எடுத்த அனைத்து முயற்சியுமே தோல்வியிலேயே முடிந்துள்ளது. அணியில் பல மாற்றங்கள் செய்த போதும் முடிவு மட்டும் மாறவே இல்லை.
லட்சக்கணக்கான ரசிகர்கள் விளையாட்டை பார்த்து கொண்டிருக்கின்றனர், இதில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை.இத்தொடரில் இளம் வீரர்களுக்கு அவ்வளவாக வாய்ப்பு கொடுக்கவில்லை என்பது உண்மை.
மேலும் சென்னை அணியில் உள்ள இளம் வீரர்களிடம் பெரிய உத்வேகம் எதையும் பார்க்கவில்லை.
அடுத்தடுத்த போட்டிகளில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். இளம் வீரர்களும் எவ்வித நெருக்கடியும் இல்லாமல் விளையாட ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தி தரும் என்று கூறினார்.
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…