தோனி இல்லை …!வருத்தத்தில் ரசிகர்கள் …!சேப்பாக்கம் மைதானத்தில் மந்தமான டிக்கெட் விற்பனை …!

Default Image

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ்  அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டிக்கு   டிக்கெட் வாங்கும் ரசிகர்களின் கூட்டம் வழக்கத்திற்கு மாறாக சற்று குறைவாக காணப்பட்டது.

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இழந்தது.அதேபோல் 5 போட்டிக் கொண்ட ஒருநாள் தொடரை 3-1 என்ற கணக்கிலும் இந்தியா கைப்பற்றியது.

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான 3 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடரில் முதல் ஆட்டம் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று (4-ந்தேதி) நடைபெறுகிறது.

விராட் கோலிக்கு 20 ஓவர் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ரோகித்சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.20 ஓவர் போட்டிக்கான அணியில் இருந்து முன்னாள் கேப்டனும், அணியின் சீனியர் வீரருமான டோனி நீக்கப்பட்டுள்ளார்.இது நாடு முழுவதும் உள்ள அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ்  அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 11-ம் தேதி நடைபெறுகிறது.

சேப்பாக்கம் டி20 கிரிக்கெட் போட்டி: டல்லடித்த டிக்கெட் விற்பனைஇன்று காலை 11.30 மணிக்கு இதற்கான டிக்கெட் விற்பனை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. டி20 கிரிக்கெட் தொடரில் தோனி, விராட் கோலி இல்லாததன் தாக்கம் டிக்கெட் வாங்கும் ரசிகர்களின் கூட்டம் வழக்கத்திற்கு மாறாக சற்று குறைவாக காணப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்