கிரிக்கெட் வட்டாரங்களின் புருவத்தை தூக்க வைத்த தோனி..!!டென்னிஸில் அசத்தி சாம்பியன் பட்டம் வென்று சாதனை..!!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகிந்திர சிங் தோனி தற்போது டென்னிஸ் போட்டிகளில் கலந்துகொண்டு சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியானது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.இந்த ஆஸ்திரேலியத் தொடரில் இருந்து தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.இது கடும் சர்ச்சையாக பேசப்பட்டது.தோனி ஓய்வால் ஓரங்கட்டப் படுகிறார் என்று ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வந்த நிலையில் தோனி இந்த ஓய்வை தனது குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு வருகிறார். இந்த நிலையில் பொது நிகழ்ச்சிகளிலும் கவனம் செலுத்தி அதில் கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில் ராஞ்சியில் நடைபெற்ற டென்னிஸ் போட்டியில் தோனி கலந்துகொண்டார்.
இதுவரை அவரை மட்டை பேட்டில் பார்த்த நமக்கு இது புதுவிதமான ஒரு மகிழ்ச்சியை தந்தது.இந்த டென்னிஸ் போட்டி ராஞ்சியில் கண்ட்ரி கிரிக்கெட் கிளப் சார்பில் நடத்தப்பட்டது.இந்த டென்னிஸ் தொடரில் உள்ளூர் வீரர் சுமித் குமார் என்பவருடன் இணைந்து தோனி இரட்டையர் பிரிவில் பங்கேற்றார் . களமிரங்கிய இந்த இணை லீக் முதல் அரையிறுதி சுற்று என அனைத்து சுற்றுகளிலும் சிறப்பாக செயல்பட்டு விளையாடியது. போட்டியின் இறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது.இந்த ஆட்டத்திலும் இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது.
6-3, 6-3 என்ற செட் கணக்கில் தன் எதிர் அணியை வீழ்த்தி இந்த ஜோடி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. தோணிக்கு விளையாட்டிலிருந்து யாராலும் ஓய்வு கொடுக்கமுடியாது என்று ரசிகர்கள் பதிவிட்டு வரும் வேளையில் சாம்பியன் பெற்ற தோணியின் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தோணிக்கு டென்னிஸ் மட்டுமல்லாமல் ஹாக்கி, கால்பந்த மற்றும் பைக் ரேஸ் போன்ற விளையாட்டுகளிலும் ஆர்வம் உள்ளவர் தோனி இந்நிலையில் தற்போது டென்னிஸ் விளையாட்டிலும் சாம்பியன் பட்டம் பெற்ற தோனியை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.