2019 உலககோப்பை போட்டியானது இங்கிலாந்தில் 30 தேதி துவங்குகிறது. இதில் பங்கேற்க 10 அணிகள் இங்கிலாந்து சென்றுள்ளது.தற்போது அணிகளுக்கு எல்லாம் பயிற்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது.
இந்தியா தனது உலககோப்பைக்கான முதல் பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்தை எதிர்கொண்டது.ஆனால் அந்த ஆட்டத்தில் தோல்வியை தழுவியது. இந்திய பேட்ஸ்மேன்களின் சொதப்பல் தான் தோல்விக்கு காரணம் என்று கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியில் விமர்சனங்கள் கடுமையாக எழுந்தது.
இந்நிலையில் இன்று இந்தியா தனது 2 வது பயிற்சி ஆட்டத்தில் வங்களா தேசத்தை எதிர்கொண்டது.இதில் டாஸ் வென்ற வங்க தேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது.இதனால் இந்தியா பேட்டிங்கில் களமிறங்கியது.
களமிறங்கிய தொடக்க இந்திய வீரர்கள் அவுட் ஆகி அதிர்ச்சி அளிக்க இந்தியா 102 ரன் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.அதன்படி தவான் 1 ரன்னிலும் ,ரோகித் சர்மா 19 ரன்னிலும் கேப்டன் விராட் கோலி 47 ரன்னிலும், விஜய் சங்கர் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
5 வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கே.எல் ராகுல் மற்றும் தோனி ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது.மேலும் இருவரின் அதிரடி ஆட்டத்தால் அணியின் ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது.மேலும் இருவரும் சதம் விளாசி ரசிகர்களுக்கு சதத்தை விருந்தாக படைத்தனர்.
அதன்படி கே.எல் ராகுல் 99 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சருடன் 108 ரன்களை குவித்து ஆட்டமிழக்க மறுபக்கத்தில் தோனி 78 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்சருடன் 113 ரன்களை குவித்து வெளியேறினார். இதனால் இந்தியா 50 ஓவர் முடிவில் 359 ரன்களை குவித்தது. வங்காள தேசத்திற்கு 360 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
இருவரின் சதமும் அவர்களுக்கு முக்கியமானது ஆகும்.மேலும் தோனியின் ஆட்டத்திற்கு எதிராக வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு தன்னுடைய சதத்தால் பதிலளித்து வாயை அடைத்து விட்டார்.தற்போது வங்க தேசம் பேட்டிங் செய்து வருகிறது.
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…
சென்னை :கரும்புச்சாறை வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…