“தோனியால் 10 ஓவர்கள் களத்தில் நின்று விளையாட முடியாது” – சிஎஸ்கே பயிற்சியாளர் ஓபன் டாக்.!
தோனி கடைசி நேரத்தில் களமிறங்குவது குறித்து விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், சிஎஸ்கே பயிற்சியாளர் ப்ளெமிங் விளக்கம் அளித்துளளார்.

சென்னை : நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸிடம் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதை தொடர்ந்து, தோனி ஆரம்பத்தில் பேட்டிங் செய்யாதது ஏன் என்பது குறித்து சமுக வலைத்தளங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
இதற்கு கரணம் தோனிக்கு மேனேஜ்மென்ட் கொடுத்த சுதந்திரத்தால் தான் அவர், 9வது வரிசையில் களமிறங்குகிறார் என்கின்றனர் சிலர். பயிற்சியாளர் ஃப்ளெமிங், தோனிக்கு முன்பு இருந்ததை போல, உடல் ஒத்துழைக்காததால், அவர் நீண்ட நேரம் பேட்டிங் செய்ய முடியாது என்கிறார்.
ஏன் தோனி கீழ் வரிசையில் பேட் செய்கிறார் என்பது குறித்து பயிற்சியாளர் ப்ளெமிங் பேசுகையில், “அது போட்டியின் சூழ்நிலையைப் பொறுத்தது. அவரது உடல், முழங்கால்கள் முன்பு இருந்தது போல் இல்லை. அவர் நன்றாக அசைகிறார், ஆனால் இன்னும் அவை முழுமையாக சரியாக இல்லை. எம்.எஸ்.தோனியின் உடல் வலிமையும், கால் முட்டியும் முன்பு இருந்ததைப் போல கிடையாது. அவரால் 10 ஓவர்கள் களத்தில் நின்று விளையாட முடியாது.
தன்னால் முடிந்த வரை அணிக்கு பங்களிப்பை தருகிறார். ஆட்டத்தின் தன்மை எப்படி உள்ளது என்பதைப் பொறுத்து, சில போட்டிகளில் சற்று முன்பாக களமிறங்குவார். அவரது தலைமைத்துவமும் விக்கெட் கீப்பிங்கும் மிக முக்கியம், அவர் இவ்வளவு தாமதமாக பேட்டிங் செய்ய ஒருபோதும் வெளியே வந்ததில்லை. 13-14 ஓவர்களுக்குப் பிறகுதான் அவர் பேட்டிங் செய்ய வருகிறார் ” என்று கூறினார்.
கடந்த சில ஆண்டுகளாக தோனி முழங்கால் பிரச்சினை குறித்து பேச்சுகள் இருந்து வந்தாலும், அவர் களத்தில் விக்கெட் கீப்பிங் செய்வதில் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். ஆனால், ஃபிளெமிங் கூறிய இந்த தகவல், ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் இது ஒரு சோகமான செய்தியாக இருந்தாலும், தோனியின் அனுபவமும், மேட்ச் வின்னிங் திறமையும் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025