இந்த விஷயத்தில் தோனியும் விராட் கோலியும் ஒன்று..!
பந்து வீச்சாளர்களுக்கு இருவரும் ஒரே மாதிரியான அறிவுரைகளை வழங்குவார்கள் என்று குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது, இந்த கொரனோ வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பள்ளிகள், கல்லூரிகள், விளையாட்டு போட்டிகள் சினிமா படங்களின் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.இதனால் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் வீட்டில் முடங்கியுள்ளார்கள் மீண்டும் கிரிக்கெட் போட்டி எப்பொழுது நடக்கும் என்று ரசிகர்கள் காத்துள்ளார்கள்.
இந்நிலையில் இந்தியா கிரிக்கெட் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் விராட்கோலி மற்றும் தோனியை பற்றி சுவாரசியமான தகவலை கூறியுள்ளார், அதில் முதலில் விராட்கோலி பற்றி கூறியது களத்திற்கு வெளியேயும் சரி, இக்கட்டான சூழ்நிலைகளில் விராட் கோலி எனக்கு எப்போதும் பக்கபலமாக இருந்து வருகிறார்.நான் பந்து வீசும் பொழுது எனக்கு நல்ல அறிவுரைகளை கூறுவார்.
நமது அணையில் உள்ள அணைத்து பந்து வீச்சாளர்களின் உணர்வுகளை விராட் கோலி துல்லியமாகப் புரிந்து வைத்திருப்பார். அதற்கு பிறகு உடனடியாக அருகில் வந்து, எந்த இடத்தில் தவறு செய்கிறோம் என்பதைச் சுட்டிக் காட்டிவிட்டுச் செல்வார். மேலும் அவரது பேட்டிங் பற்றி சொல்லியே தெரியவேண்டாம், மிகவும் சிறந்த வீரர் என்று கூறியுள்ளார்.
அடுத்ததாக தோனியை பற்றி கூறுகையில், நான் தோனியின் மிகப்பெரிய ரசிகன் அவர் இல்லாத போட்டிகளில் இந்திய அணி சிரமை படும் நங்கள் நெருக்கடியான சூழ்நிலையில் இருக்கும் பொழுது தோனி எங்களை அழைத்து முக்கியமான அறிவுரைகளை வழங்குவார், மேலும் அணியை வழிநடத்துவதில் விராட் கோலி, மற்றும் தோனி வெவ்வேறு பாணிகளைப் கடைப்பிடித்தாலும், பந்து வீச்சாளர்களுக்கு இருவரும் ஒரே மாதிரியான அறிவுரைகளை வழங்கினார்கள்’ இந்த விஷயத்தில் தோனியும் விராட் கோலியும் ஒன்று என்று தெரிவித்துள்ளார்.