நானும் தோனியும் தரையில் ஒன்றாக படுத்து தூங்கினோம் – கௌதம் கம்பீர்..!
தோனியும் நானும் தரையில் ஒன்றாக படுத்து தூங்கினோம் என்று கௌதம் கம்பீர் கூறியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் கூறியது இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் சிறந்த கேப்டன் தோனியின் வெற்றிகளுக்கான பலன் கங்குலிக்கு தான் அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார், மேலும் கங்குலியைவிட சிறந்த கேப்டன் தோனி என்று கூறியுள்ளார்.
மேலும் ஏனெனில் இந்திய டெஸ்ட் அணி முதன்முறையாக டெஸ்ட் போட்டிகள் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்து தோனி கேப்டனாக இருக்கும் பொழுது தான் சாதனை படைத்தது, மேலும் புள்ளி விவரங்களை வைத்துப் பார்த்தால் கங்குலியை விட தோனி தான் சிறந்த கேப்டனாக திகழ்கிறார்.
அடுத்ததாக பேசிய கௌதம் கம்பீர் கென்யா, ஜிம்பாப்வே உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இருவரும் ஒரே அறையில் தங்கினர். அப்போது இருவருக்குள்ளும் நல்ல நட்பு இருந்தது. மேலும் அப்பொழுது அறை சிறியதாகா இருந்ததால் நங்கள் தரையில் படுத்து தூங்கினோம், அப்பொழுது அவருடைய மூடி பராமரிப்பதை பற்றி என்னிடம் கூறினார் என்று கௌதம் கம்பீர் கூறியுள்ளார்.