இந்திய இராணுவத்தில் பயிற்சி பெற தோனிக்கு அனுமதி!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ,இந்திய இராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் கர்னலாக உள்ளார்.இந்நிலையில் தோனி இராணுவ குழுவுடன் சேர்ந்து பயிற்சியில் ஈடுபடுவதற்கு அனுமதி கேட்டு இருந்தார்.இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இந்திய அணி 3 டி20 , 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ள தொடரில் தன்னை தேர்வு செய்ய வேண்டாம் என முன்னாள் கேப்டன் தோனி கூறினார்.
இதை தொடர்ந்து இராணுவ தளபதி பிபின் ராவத் தோனியை இந்திய ராணுவத்தில் பயிற்சி பெற அனுமதி கொடுத்தாததாகவும் , இதனால் தோனி காஷ்மீரில் உள்ள இந்திய இராணுவத்துடன் பாராசூட் ரெஜிமெண்டில் பயிற்சி பெற போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.