இதுல எல்லோரும் தோனி கிட்ட எச்சரிக்கையா இருங்கப்பா…!எச்சரிக்கும் ஐசிசி..!மிரட்டும் MS..!
நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது.இதில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் 4-1 என்று வென்றுள்ளது.
இந்த வெற்றியானது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனியின் அசாத்திய விக்கெட் என்று தான் சொல்லவேண்டும்.நியூ.வசம் திரும்பிய ஆட்டத்தை இந்தியா பக்கம் கொண்டு வந்தவர் தோனி போட்டியில் கிரீஸைவிட்டு வெளியேவந்த நியூசிலாந்து வீரர் ஜேம்ஸ் நீசமை அப்படி கண் இமைக்கும் நேரத்திற்குள் ரன் அவுட் ஆக்கி வெளியேற்றி நியூ.., அதிர்ச்சி வைத்தியம் தந்தார்.
இந்நிலையில் தோனி குறித்து ஐசிசி பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவு இணையத்தில் கிரிக்கெட் வட்டாரம் என அனைத்து தரப்புகளிடமும் மிகுந்த கவனத்தை பெற்றுவருகிறது.
ஜப்பானைச் சேர்ந்த ஒருவர், தங்களுக்கு ஏதாவது கிரிக்கெட் அறிவுரை இருந்தால் கொடுங்கள் என்று ஐசிசியின் டுவிட்டர் பக்கத்தில் கேட்டுள்ளார்.
அதற்கு பதிலளித்துள்ள ஐசிசி ஸ்டெம்பிற்கு பின்னால் தோனி நிற்கும்போது பேட்ஸ்மேன்கள் யாரும் கிரீஸைவிட்டு ஒரு போதும் காலை எடுக்காதீர்கள் என்று பதில் அளித்தது.
ஐசிசியின் தற்போதைய இந்தப் பதிவு தற்போது இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.