தொடரும் ஆக்சிஜன் பற்றாக்குறை.. ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கிய டெல்லி அணியின் அதிரடி பேட்ஸ்மேன் தவான்!

Published by
Surya

ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடும் ஷிகர் தவான், இந்தியாவில் நிலவும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக ரூ.20 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில், நாள் ஒன்றுக்கு 3 லட்சத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவல் அதிகமுள்ள மாநிலங்களில் கட்டுப்பாட்டுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் ஆக்ஸிஜன், ரெம்டெசிவிர் மருந்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

காசு கொடுத்தும் ஆக்ஸிஜன் கிடைக்காமல் பலரும் உயிரிழந்து வரும் நிலையில், பிரபலங்கள் கிரிக்கெட் வீரர்கள் என பலரும் உதவி வருகின்றனர். அந்தவகையில், இந்திய அணியின் பேட்ஸ்மேன் மற்றும் ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடும் ஷிகர் தவான், இந்தியாவில் நிலவும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக ரூ.20 லட்சம் நிதி அளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரின் ட்விட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “நாம் இப்போது இக்கட்டமான சூழ்நிலையில் இருக்கின்றோம். இந்த நேரத்தில் நாம் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வது, காலத்தின் தேவையாக உள்ளது. நீங்கள் இத்தனை நாட்களாக எனக்கு கொடுத்த அன்பையும், ஆதரவையும் நான் நாட்டு மக்களுக்காக கொடுக்கவுள்ளேன்”

அந்தவகையில், இந்தியாவின் ஆக்ஸிஜன் தேவை அதிகரித்து வரும் நிலையில், ரூ. 20 லட்சமும், இனி நடைபெறவுள்ள போட்டிகளில் எனக்கு கிடைக்கும் பரிசு தொகையையும் மிஷன் ஆக்ஸிஜனுக்கு கொடுக்கவுள்ளேன். கொரோனா தடுப்பு பணியாளர்களுக்கு ஈடுபடும் முன்கள பணியாளர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். நீங்கள் செய்யும் பணிக்கு நாங்கள் கடன்பட்டுள்ளோம். அனைவரும் முகக்கவசம் அணியுங்கள், சமூக இடைவெளியை கடைபிடியுங்கள். ஒன்றுபடுவோம், வெல்வோம்” என்று தெரித்துள்ளார்.

Published by
Surya

Recent Posts

பருப்பு விவகாரம்., “பாஜகவின் ஆதாரமற்ற குற்றசாட்டு.!” தமிழக அரசு வெளியிட்ட விளக்க அறிக்கை..,

பருப்பு விவகாரம்., “பாஜகவின் ஆதாரமற்ற குற்றசாட்டு.!” தமிழக அரசு வெளியிட்ட விளக்க அறிக்கை..,

சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…

18 mins ago

IND vs NZ : ‘ஒரு கேப்டனாக வேதனை அடைந்தேன்’.. ரோஹித் சர்மா பேச்சு!

பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…

1 hour ago

‘நவம்பர்… தமிழகத்திற்கு அதிக மழை கொண்டு வரும்’ – விளக்கம் கொடுத்த வெதர்மேன்!

சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…

2 hours ago

ஹமாஸ் தலைவர் உயிரிழப்பு : “மீதம் இருப்பவர்களையும் அழிப்போம்” – நெதென்யாகு சபதம்!

ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…

2 hours ago

காலை 10 மணி வரை இந்த 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…

2 hours ago

பை பை ஆஸி.! இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா மகளிர் அணி!

துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…

11 hours ago