இந்திய அணி 36.4 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 263 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில், இன்று இரு அணிகளுக்கும் இடையே முதல் ஒருநாள் போட்டி கொழும்பில் உள்ள ஆர்.பிரமதாச மைதனத்தில் நடைபெற்றது.
முதலில் இலங்கை அணியின் தொடக்க வீரராக அவிஷ்கா பெர்னாண்டோ, மினாத் இருவரும் களமிறங்கினர். சிறப்பாக விளையாடிய அவிஷ்கா 32 ரன்னில் தனது விக்கெட்டை இழந்தார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய பானுக ராஜபக்ச 24, தனஞ்சய் தி சில்வா 14 ரன்னில் விக்கெட்டை இழந்தனர்.
மத்தியில் களம் கண்ட சரித் அசலங்கா 38, கேப்டன் தசுன் ஷானகா 39 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். இறுதியாக இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 262 ரன்கள் எடுத்தனர்.
இந்திய அணியில், சாஹல், தீபக் சஹர்,குல்தீப் ஆகிய மூவரும் தலா 2 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா, குருனால் பாண்டியா தலா ஒரு விக்கெட்டை பறித்தனர். இந்திய அணிக்கு 263 ரன்கள் இலக்குடன் களமிறங்கியது. இந்திய அணியின் தொடக்க வீரராக பிருத்வி ஷா, தவான் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலேயே பிருத்வி ஷா தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில் தவான் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
பிருத்வி ஷா 26 பந்தில் 43 ரன்கள் குவித்தார். அதில் 9 பவுண்டரி அடங்கும். பின்னர் களமிறங்கிய இஷன் கிஷன் தவானுடன் கூட்டணி அமைத்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர்கள் இருவருமே அரை சதம் விளாசினார். அதிரடியாக விளையாடிய இஷன் கிஷன் 59 ரன்னில் விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய மனிஷ் பாண்டே வந்த வேகத்தில் 26 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
பின்னர் சூரியகுமார் யாதவ் களமிறங்கினர். தொடக்கத்தில் இருந்து அதிரடியாக விளையாடி வந்த ஷிகர் தவான் அதிரடி காட்ட இறுதியாக இந்திய அணி 36.4 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 263 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.
கடைசிவரை களத்தில் தவான் 86* , சூரியகுமார் யாதவ் 31* ரன்கள் எடுத்து களத்தில் நின்றனர்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…