இந்திய அணிக்கு தவான் கேப்டன், பயிற்சியாளராக வி.வி.எஸ்.லக்ஷ்மன்.!
ஆசிய விளையாட்டு போட்டிகளில் தவான் தலைமையிலான இந்திய அணி களமிறங்க வாய்ப்புள்ளதாக பிசிசிஐ தரப்பு தகவல்.
ஆசிய விளையாட்டு போட்டிகள் 2023இல் இந்திய ஆடவர் அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாகவும், பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் வி.வி.எஸ்.லக்ஷ்மன் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக பிசிசிஐ தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. ஆசிய விளையாட்டு போட்டிகள் 2023இல் விளையாட இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிக்கு பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது.
சீனாவின் ஹாங்சோவில் செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 8 வரை ஆசிய விளையாட்டு போட்டிகள் 2023 நடைபெறுகிறது. ஏற்கனவே இந்திய அணிக்கு ஆசியக்கோப்பை மற்றும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை என இருக்கிற நிலையில் ஆசிய விளையாட்டு போட்டிகள் 2023இலும் இந்திய அணி களமிறங்குகிறது.
ஆசிய விளையாட்டு போட்டிகள் என்பது ஐசிசியிலோ அல்லது சர்வதேச கிரிக்கெட்டின் கீழ் வராது என்றாலும், வெற்றியின் அடிப்படையில் பதக்கங்கள் வெல்ல இந்திய அணிக்கு வாய்ப்புகள் இருக்கின்றன. இந்நிலையில் தவான் தலைமையில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.