தவானும்,ரோகித்தும் வேற மாதிரி பேட்ஸ்மேன்கள் என்று ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார்.
3 வது போட்டி மற்றும் கடைசி போட்டி ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் நேற்று நடைபெற்றது . இந்தியாவுக்கு எதிரான 3 வது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்தது.
ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 164 ரன்கள் அடித்தது.ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஷார்ட் 33 ரன்கள் எடுத்தார் .இந்திய அணியின் பந்து வீச்சில் க்ருனால் பாண்டியா 4 விக்கெட் எடுத்தார்.
இதனால் இந்தியாவிற்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா.
இதன் பின் களமிறங்கிய இந்திய அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து 168 ரன்கள் அடித்து வெற்றி இலக்கை அடைந்தது .இதனால் இந்திய அணி 3 வது போட்டி மற்றும் கடைசி டி20 போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.களத்தில் கோலி 61 ,கார்த்திக் 22 ரன்களுடன் இருந்தனர்.
3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமன் பெற்றது.
இந்நிலையில் இதன் பின் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் கூறுகையில், இந்திய அணி வீரர்கள் மிகச்சிறப்பாக பேட்டிங் செய்தனர். நாங்கள் இன்னும் கொஞ்சம் அதிகமான ரன்கள் அடித்திருந்தால் எங்களுக்கான வாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனாலும் நாங்கள் சிறப்பாகவே ஆடினோம்.
தவானும்,ரோகித்தும் வேற மாதிரி பேட்ஸ்மேன்கள். அவர்களுக்கு எதிராக பந்து வீசுவது எந்த பவுலருக்கும் கடினமான விஷயம்தான். அதனால்தான் அவர்கள் மிகச்சிறந்த தொடக்க ஜோடியாக திகழ்கின்றனர் என்று ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா: இந்த மாதம் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது.…
வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு அனைத்து வைணவ ஆலயங்களிலும் கோலாகலமாக திறக்கப்பட்டது. சென்னை…
சென்னை : சமீபகாலமாக விளைநிலங்களில் கட்டு பன்றிகள் நுழைந்து சேதம் ஏற்படுத்தி வருவதால் அதற்கு தகுந்த நடவடிக்கைகளை அரசு எடுத்துக்கொள்ளவேண்டும் என…
சென்னை : சட்டப்பேரவையின் 5-வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த…
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சி மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு…
டெல்லி: நடிகை தீபிகா படுகோன் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல், பல்வேறு சமூக நிகழ்வுகள், சர்ச்சை பேச்சுகள், சில நேரங்களில்…