தவானும்,ரோகித்தும் வேற மாதிரி பேட்ஸ்மேன்கள்..!அவர்களுக்கு எதிராக பந்து  வீசுவது கடினம் …! ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச்

Default Image

தவானும்,ரோகித்தும் வேற மாதிரி பேட்ஸ்மேன்கள் என்று ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார்.

3 வது போட்டி மற்றும் கடைசி போட்டி ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் நேற்று  நடைபெற்றது . இந்தியாவுக்கு எதிரான 3 வது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்தது.

ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 164 ரன்கள் அடித்தது.ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஷார்ட் 33 ரன்கள் எடுத்தார் .இந்திய அணியின் பந்து வீச்சில் க்ருனால் பாண்டியா 4 விக்கெட் எடுத்தார்.

இதனால் இந்தியாவிற்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா.

Image result for rohit sharma DHWAN

இதன் பின் களமிறங்கிய இந்திய அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து 168  ரன்கள் அடித்து வெற்றி இலக்கை அடைந்தது .இதனால் இந்திய அணி 3 வது போட்டி மற்றும் கடைசி  டி20 போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.களத்தில் கோலி 61 ,கார்த்திக் 22  ரன்களுடன் இருந்தனர்.

3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில்  இருந்தது.இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமன் பெற்றது.

 

இந்நிலையில் இதன் பின்  ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் கூறுகையில், இந்திய அணி  வீரர்கள் மிகச்சிறப்பாக பேட்டிங் செய்தனர். நாங்கள் இன்னும் கொஞ்சம் அதிகமான ரன்கள் அடித்திருந்தால் எங்களுக்கான வாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனாலும் நாங்கள் சிறப்பாகவே ஆடினோம்.

Image result for rohit sharma DHWAN FINCH

தவானும்,ரோகித்தும் வேற மாதிரி பேட்ஸ்மேன்கள். அவர்களுக்கு எதிராக பந்து  வீசுவது எந்த பவுலருக்கும் கடினமான விஷயம்தான். அதனால்தான் அவர்கள் மிகச்சிறந்த தொடக்க ஜோடியாக திகழ்கின்றனர் என்று ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
durai murugan periyar
donald trump joe biden
pawan kalyan roja
erode by election 2025
periyar seeman
R Ashwin speech about Hindi