ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய டெவோன் கான்வே… சென்னை அணிக்கு புதிய வீரர் இவர்தான்!
ஐபிஎல்2024: காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து டெவோன் கான்வே விலகினார் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கடந்த சில வாரங்களாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் லீக் சுற்றில் அனைத்து அணிகளும் தலா 6 போட்டிகளில் விளையாடி உள்ளனர். அதில் குறிப்பாக சென்னை 6 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
இந்த சூழலில் சென்னை அணியின் முக்கிய வீரராக இருந்த டெவோன் கான்வே காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ஐபிஎல் சீசன் தொடங்கும் முன்பே டெவோன் கான்வேவுக்கு கட்டை விரலில் காயம் ஏற்பட்டதில் முதல் பாதியில் பங்கேறக்கமாட்டார் என்றும் இரண்டாம் பாதியில் சென்னைக்கு திரும்புவார் எனவும் கூறப்பட்டது.
டெவோன் கான்வே காயம் ஏற்பட்டதால் சென்னை அணிக்கு சற்று ஓப்பனிங் பேட்டிங்கில் பின்னடைவாக இருக்கும் என கருதப்பட்டது. ஆனால், கான்வே இடத்தில் ரச்சின் ரவீந்திரா களமிறங்கி சிறப்பாக விளையாடி வருகிறார். இருந்தாலும் கான்வே அளவுக்கு அவர் இல்லை என்று ரசிகர்கள் மத்தியில் கருத்து இருந்து வந்தது. இதனால் கான்வே எப்போது அணிக்கு திரும்புவார் என எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்தனர்.
ஆனால், ரசிகர்களுக்கு தற்போது ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. அதாவது நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து கான்வே விலகினார் என்றும் அவருக்கு பதில் ரிச்சர்ட் க்ளீசனை சென்னை அணி வாங்கியுள்ளது எனவும் ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. டெவோன் கான்வே கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 23 போட்டிகளில் விளையாடி 924 ரன்கள் எடுத்துள்ளார்.
இதில் 9 அரை சதங்கள் மற்றும் அதிகபட்ச ஸ்கோர் 92* ரன்களை அடித்துள்ளார். இதில் குறிப்பாக கடைசி சீசனில் கான்வே சென்னை அணிக்கு ஒரு தூணாக இருந்தார். தற்போது அவர் விலகியதால் இங்கிலாந்து வீரர் ரிச்சர்ட் க்ளீசனை ரூ.50 லட்சத்துக்கு சிஎஸ்கே அணி வாங்கியுள்ளது. இங்கிலாந்து நாட்டுக்காக 6 T20 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை எடுத்துள்ள ரிச்சர்ட் க்ளீசன், மொத்தம் 90 டி20 போட்டிகளில் விளையாடி 101 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
???? NEWS ????
Devon Conway ruled out #TATAIPL 2024 due to an injury, Chennai Super Kings add Richard Gleeson to the squad.
Details ????https://t.co/5Wv7bO3nUh
— IndianPremierLeague (@IPL) April 18, 2024