ஆஸ்திரேலியா நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. முதலில் விளையாடி வரும் டி20 தொடரில் முதல் 2 போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரு அணிகளும் இடையே நடைபெறவுள்ள கடைசி மற்றும் 3-வது போட்டி நாளை நடைபெற உள்ளது.
டெவான் கான்வே காயம்:
இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் டெவான் கான்வே காயம் காரணமாக விலகி உள்ளார். நேற்று ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க்கில் நடைபெற்ற 2-வது போட்டியில் முதலில் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்தபோது விக்கெட் கீப்பிங் செய்து கொண்டு இருந்த டெவான் கான்வே இடது கட்டைவிரலில் காயம் ஏற்பட்டது. ஆட்டத்தின் இரண்டாவது ஓவரின் போது, 140 கிமீ வேகத்தில் பந்துவீசிக் கொண்டிருந்த ஆடம் மில்னேவின் பந்து டெவான் கான்வே இடது கட்டை விரலில் தாக்கியது.
இதனால் அவருக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் அவர் மைதானத்தில் இருந்து வெளியேறினார். அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பிங் செய்ய ஃபின் ஆலன் வந்தார். இருப்பினும் நியூசிலாந்து பேட்டிங் செய்யும் போது கூட டெவான் கான்வே பேட்டிங் செய்ய வரவில்லை. இதனால் இப்போட்டியில் ஆஸ்திரேலியா 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நாளை நடைபெறும் மூன்றாவது டி20 போட்டியில் இருந்து நியூசிலாந்தின் டெவான் கான்வே விலகி உள்ளார்.
ரச்சின் ரவீந்திரா காயம்:
இதற்கு முன் முதல் டி20 போட்டியில் இடது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ரச்சின் ரவீந்திரா டி20 2 மற்றும் 3-ம் டி போட்டிகளில் இருந்து விலகினார். முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணியில் ரச்சின் ரவீந்திரா 35 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார். அதே போல டெவான் கான்வே 46 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார்.
தற்போது நியூசிலாந்து அணியில் காயமடைந்துள்ள டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா இரண்டு வீரர்களும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியில் இடம் பெற்றுள்ள முக்கிய வீரர்கள், இவர்கள் தற்போது காயம் அடைந்துள்ளதால் ரசிகர் மத்தில் இவர்கள் ஐபிஎல் போட்டிகள் கலந்து கொள்வார்களா..? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் ஐபிஎல் போட்டி அடுத்த மாதம் 22-ம் தேதி தொடங்க உள்ளது.
இப்போட்டிற்கு இன்னும் 27 நாட்களில் உள்ள நிலையில் அதற்குள் காயமடைந்துள்ள டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா விரைவில் குணமடைந்து பயிற்சியில் ஈடுபட வேண்டும். காயம் குணமாக சிறிது காலம் எடுத்துக்கொண்டால் சென்னை அணி விளையாடும் ஒரு சில போட்டிகளில் இவர்களுக்கு விளையாட வாய்ப்பு கிடைக்குமா..? என்ற கேள்வி எழுந்துள்ளது.
17-வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டி மார்ச்-22ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இதில் சென்னை அணியும், பெங்களூரு அணியும் மோதவுள்ளது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…