லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இணைகிறார் தேவ்தத் படிக்கல்..?

Devdutt Padikkal

IPL2024 : இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) என்பது ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் ஒரு கிரிக்கெட் திருவிழா ஆகும். இதில் 10 அணிகள் பங்கேற்று விளையாடும். அந்த வகையில், கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் 2023 தொடரின் இறுதிப்போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டு வெற்றி பெற்றது.

இதன்மூலம் சென்னை 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இதேபோல, 17 ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த 20 ஓவர்கள் கொண்ட இந்த டி-20 தொடருக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் அதாவது டிசம்பர் 19ம் தேதி, துபாயில் நடைபெற உள்ளது.

பிஃபா உலகக்கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று.! கத்தாரிடம் இந்தியா தோல்வி.!

இந்நிலையில், இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஏலத்திற்கு முன்னதாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் தேவ்தத் படிக்கல்-ஐ அணியில் சேர்க்க உள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அவர்களின் மிடில் ஆர்டரை வலுப்படுத்த, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து தேவ்தத் படிக்கலை தங்கள் அணியில் சேர்க்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் 2019க்கு முன்னதாக தேவ்தத் படிக்கல் ரூ.20 லட்சத்திற்க்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏலத்திற்கு எடுத்தது. ஆனால் அந்த சீசனில் அவர் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. ஆனால் அடுத்த ஆண்டு அவர் விளையாடிய 15 போட்டிகளில் 473 ரன்கள் எடுத்தார்.

IPL 2024: இரண்டு முறை சாம்பியனாக்கிய அணிக்கு திரும்பிய கெளதம் கம்பீர்..!

2020ம் ஆண்டைப் போலவே 2021 வது ஆண்டிலும் சிறப்பாக செயல்பட்டார். இதன்பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி படிக்கலை ரூ.7.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இந்த முறை இரண்டு சீசன்களில் முறையே 376 மற்றும் 261 ரன்கள் எடுத்தார். இதனால் அவர் ஆட்டம் நம்பிக்கை அளிக்கும் வகையில் இல்லை எனக் கூறி, ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் அவரை விடுவிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு இடையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இருந்து வெளியேறிய கௌதம் கம்பீர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இணைந்து உள்ளார். கம்பீரின் தலைமையின் கீழ் கொல்கத்தா அணி இரண்டு முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

PM Narendra Modi’s stern warning
Chhattisgarh Naxal Encounter
Pahalgam terror attack video
Pahalgam Attack news
Kashmir Attack
america terrorist attack in kashmir