வயசானாலும் ‘சிக்ஸர் சிங்கம்’ தான்…மிரள வைத்த யுவராஜ் சிங்..வைரலாகும் வீடியோ ..!
சிக்ஸர் என்றாலே நம்மளுடைய நினைவுக்கு வரும் ஒரு பெயர் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் என்றே சொல்லலாம். ஏனென்றால் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடிப்பது எல்லாம் சாதாரண விஷயம் அல்ல, யுவராஜ் சிங் இங்கிலாந்துக்கு எதிராக கடந்த 2007-ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் 6 பந்துகளில் 6 சிக்ஸர் விளாசி சாதனை படைத்தார். அந்த போட்டியில் அவர் ஆடிய ஆட்டம் யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாத ஒரு என்றே கூறலாம்.
பல ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடி வந்த யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஏற்கனவே ஓய்வுபெற்றுவிட்டார். ஓய்வுபெற்றவர்கள் விளையாடும் உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜெண்ட்ஸ் போட்டிகளில் இந்தியாவுக்காக கேப்டனாக யுவராஜ் சிங் தற்போது விளையாடி கொண்டு வருகிறார். அதில் தான் நேற்று, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற அரை இறுதி போட்டியில் அற்புதமான இன்னிங்ஸ் விளையாடி சிக்ஸர்கள் விளாசி வாணவேடிக்கை காட்டியுள்ளார்.
நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் யுவராஜ் சிங் அதிரடியாக விளையாடி 4 பவுண்டரி 5 சிக்ஸர்கள் என மொத்தமாக 28 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார். இவருடைய அதிரடியான சிக்ஸர் வீடியோ வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பலரும் பழைய பார்ம் பழைய ஸ்டைல் அப்படியே கண்ணனுக்கு தெரியுது எனவும் வயசானாலும் சிக்ஸர் சிங்கம் தான் எனவும் கூறி வருகிறார்கள்.
யுவராஜின் இந்த இன்னிங்ஸால் இந்திய சாம்பியன்ஸ் அணி, ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலக சாம்பியன்ஸ் ஆஃப் லெஜண்ட்ஸ் 2024 லீக் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
Yuvraj Singh is an absolute beast against Australia (ICC Knockouts)🫡💥
U-19 SF – 58(25)
POTM in 2000 – 84(80)
POTM in 2007 T20 WC SF – 70(30)
POTM in 2011 ODI WC QF – 57*(65)+2W
POTM in 2024 WCL SF – 59(28)#YuvrajSingh #WCL2024
pic.twitter.com/OE1hyLx1Z2— Dhruv. (@CricNerdDhruv) July 13, 2024