5 ரன்னில் அவுட்டானாலும்.. உலக கோப்பை போட்டியில் மிதாலி உலகசாதனை..!

Default Image

அதிக போட்டிகளுக்கு கேப்டன்: 

ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பையின்  மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தின் மூலம் இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜ் புதிய சாதனை படைத்துள்ளார். ஒருநாள் உலகக் கோப்பையில் அதிக போட்டிகளுக்கு கேப்டனாக இருந்த ஒரே பெண் கேப்டன். இதன் மூலம் ஆஸ்திரேலிய கேப்டன் பெலிண்டா கிளார்க்கின் சாதனையை முறியடித்தார். பெலிண்டா கிளார்க் 23 போட்டிகளில் கேப்டனாக இருந்தார்.

 39 வயதான மிதாலிக்கு ஒருநாள் உலகக்கோப்பையில் கேப்டனாக இன்றைய போட்டி 24-வது போட்டியாகும். அதே போல விண்டீஸ் உடனான போட்டியின் மூலம் மிதாலி தனது கணக்கில் மற்றொரு சாதனையை சேர்த்துள்ளார். ஆறு உலகக்கோப்பை தொடரில் விளையாடிய முதல் பெண் கிரிக்கெட் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.

23 போட்டிகளில் 14ல் வெற்றி:

 ஒருநாள் உலகக்கோப்பையில்  மிதாலி தலைமையில் 23 போட்டிகளில் இந்தியா 14ல் வெற்றியும், 8 போட்டிகளில் தோல்வியும் கண்டுள்ளது. ஒரு போட்டி முடிவு எட்டப்படவில்லை.

மிதாலியின் ஆட்டம் சிறப்பாக இல்லை:

தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை போட்டியில் இன்றைய போட்டி இல்லாமல் இதற்கு முன் இந்திய அணி 2 போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில், மிதாலி தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானை 107 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதே சமயம் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்த உலகக் கோப்பையில் மிதாலியின் ஆட்டம் சிறப்பாக இல்லை.

மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய மிதாலி:

நடப்பு உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒன்பது ரன்களும், நியூசிலாந்துக்கு எதிராக 31 ரன்களும், இன்றை போட்டியில் வெஸ்ட் விண்டீஸ் அணிக்கு எதிராக  11 பந்துகளை எதிர்கொண்ட மிதாலி 5 ரன்களில் வெளியேறி மீண்டும் ரசிகர்களை ஏமாற்றினார்.

இந்தியா உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் மிதாலியும் பெரிய அளவில் விளையாட வேண்டும். இதுவே அவரது கடைசி உலகக் கோப்பையாகவும் இருக்கலாம். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை மிதாலி 227 ஒருநாள் போட்டிகளில் 7663 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஏழு சதங்களும் 62 அரைசதங்களும் அடங்கும்.

 

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
NZ vs BAN
Ilayaraja Biopic
mp sudha anbumani
Jayalalithaa and pm modi
nzvsban
vidaamuyarchi ott release date