ஆலோசனை வழங்கியவரை சந்திக்க ஆசை ! சச்சின் தேடிய தமிழர் இவர்தான்
- எல்போ கார்டை பற்றி கூறிய நபரை சந்திக்க ஆசைப்படுகிறேன் என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தார்
- சச்சினுக்கு ஆலோசனை வழங்கிய நபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
நேற்று கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டார்.அவரது பதிவில்,எதிர்பாராத சந்திப்புகள் சில சமயம் மறக்க முடியாத தருணங்களாக மாறுகின்றன சென்னை டெஸ்ட் தொடரின் போது Taj Coromandel ஊழியர் ஒருவர் என்னுடைய Elbow Guard பற்றி கூறிய ஆலோசனைக்குபின் அதன் வடிவத்தை மாற்றினேன் அவரை சந்திக்க ஆசைப்படுகிறேன்,கண்டுபிடிக்க எனக்கு நீங்கள் அனைவரும் உதவ வேண்டும் என்று பதிவிட்டார்.யாரும் சொல்லாததை அவர் சொன்னார். அதன்பிறகு எல்போ கார்டை ரீ டிசைன் செய்தேன் என்றும் தெரிவித்தார்.
எதிர்பாராத சந்திப்புகள் சில சமயம் மறக்க முடியாத தருணங்களாக மாறுகின்றன
சென்னை டெஸ்ட் தொடரின் போது
Taj Coromandel ஊழியர் ஒருவர் என்னுடைய Elbow Guard பற்றி கூறிய ஆலோசனைக்குபின் அதன் வடிவத்தை மாற்றினேன்அவரை சந்திக்க ஆசைப்படுகிறேன்,கண்டுபிடிக்க எனக்கு நீங்கள் அனைவரும் உதவ வேண்டும்
— Sachin Tendulkar (@sachin_rt) December 14, 2019
இந்நிலையில் சச்சின் டெண்டுல்கருக்கு ஆலோசனை வழங்கியவர் குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.அவர் சென்னை பெரம்பூரை சேர்ந்த குரு பிரசாத் என்று தெரியவந்துள்ளது.மேலும் குருபிரசாத் கூறுகையில்,சென்னையில் கடந்த 2001 -ஆம் ஆண்டு இந்தியா – ஆஸ்திரேலியா போட்டியின் போது சச்சினுக்கு ஆலோசனை வழங்கினேன். சச்சினுக்கு ஆலோசனை கூறியது வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்ச்சி என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.